PIB Headquarters
azadi ka amrit mahotsav

பிரதமரின் கிராமப்புறச் சாலைத் திட்டம் 25 ஆண்டுகளை நிறைவுசெய்தது

இடுகை இடப்பட்ட நாள்: 25 DEC 2025 11:11AM by PIB Chennai

பிரதமரின் கிராமச் சாலைத் திட்டத்தின் கீழ், அது  தொடங்கிய காலத்தில் இருந்து 8,25,114 கி.மீ. நீளத்திற்கான கிராமச் சாலைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதில் 7,87,520 கி.மீ. தொலைவிற்கான சாலைகள் அமைக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளன.

பிரதமரின் கிராமப்புறச் சாலைத் திட்டத்தின் மூன்றாம் கட்டத்தில், 1,22,393 கி.மீ. தொலைவிலான சாலைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டு, 1,01,623 கி.மீ. சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன.

இத்திட்டத்தின் நான்காவது கட்டத்தில் (2024–29), 70,125 கோடி ரூபாய் செலவில் 62,500 கி.மீ. தொலைவிற்கான சாலைகள் அமைக்கப்படுவதன்    மூலம் 25,000 குடியிருப்புகள் சாலை கட்டமைப்பு வசதிகளுடன் இணைக்கப்பட உள்ளன.

சாலைகள் அமைக்கும் பணிகள் பல்வேறு அமைப்பு முறைகளின் வாயிலாக கண்காணிக்கப்படுவதுடன், மும்முனை தரக் கட்டுப்பாட்டு அமைப்பு மூலம் நிகழ்நேரக் கண்காணிப்பு, பொறுப்புக்கூறல் மற்றும் நீண்டகால உழைப்பை உறுதி செய்கிறது.

சாலை உள்கட்டமைப்புத் திட்டங்கள், கிராமப்புற வளர்ச்சியின் ஒரு அடிப்படைக் காரணியாக அமைகிறது. இது பொருளாதார, சமூக சேவைகள் எளிதில் கிடைப்பதை உறுதி செய்கிறது. விவசாயிகளின் வருமானத்தை மேம்படுத்துவதுடன், அதிக உற்பத்தித்திறன் கொண்ட வேலைவாய்ப்பு உருவாக்கத்திற்கும், வறுமை ஒழிப்பு நடவடிக்கைகளில் குறிப்பிடத்தக்க பங்களிப்பையும்  வழங்க வகை செய்கிறது. 2025- ம் ஆண்டில், இத்திட்டம் தொடங்கப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதைக் கொண்டாடுகிறது. இத்திட்டம் இந்தியாவில் மிக அதிக அளவில் தாக்கத்தை ஏற்படுத்திய கிராமப்புற உள்கட்டமைப்புத் திட்டங்களில் முக்கியமான ஒன்றாகத் திகழ்கிறது. முன்பு சாலை வசதிகள் இல்லாத கிராமப்புறக் குடியிருப்புகளுக்கு அனைத்து பருவ காலங்களிலும் போக்குவரத்துக்கான இணைப்பை உறுதி செய்வதற்காக 2000 - ம் ஆண்டு டிசம்பர் 25 - ம் தேதி தொடங்கப்பட்ட இந்தத் திட்டம், வேளாண் வளர்ச்சி, வேலைவாய்ப்பு உருவாக்கம், கல்வி, சுகாதாரம் போன்ற அடிப்படை சேவைகளுக்கான மேம்பட்ட வசதியை வழங்குவதுடன், வறுமை ஒழிப்பு நடவடிக்கைகளுக்கு முக்கிய காரணியாகவும் உருவெடுத்துள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பை காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2208381&reg=3&lang=1      

***

AD/SV/RK


(வெளியீட்டு அடையாள எண்: 2208618) வருகையாளர் எண்ணிக்கை : 61
இந்த வெளியீட்டை படிக்க: हिन्दी , Manipuri , Gujarati , English , Urdu , Bengali , Bengali-TR