தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்
குஜராத் மாநிலம் வத்வாவில் உள்ள தொழிலாளர் வருங்கால வாய்ப்பு நிதி மண்டல அலுவலக புதிய கட்டிடத்தை மத்திய அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா டிசம்பர் 26 அன்று திறந்து வைக்கிறார்
प्रविष्टि तिथि:
24 DEC 2025 4:33PM by PIB Chennai
குஜராத் மாநிலத்தில், தொழிலாளர் வருங்கால வாய்ப்பு நிதி அமைப்பின் பிராந்திய அலுவலகங்கள் தற்போது அகமதாபாத் (பகுதி), ஆனந்த், கேடா, அம்ரேலி, போடாத் மற்றும் பாவ்நகர் ஆகிய ஆறு மாவட்டங்களில் உள்ளன. 1952 - ம் ஆண்டு தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி மற்றும் இதர வகைமுறைச் சட்டத்தின் கீழ், இந்த அமைப்பு நிறுவனங்கள் மற்றும் ஊழியர்களுக்கு சமூகப் பாதுகாப்புச் சேவையை வழங்கி வருகிறது.
டிசம்பர் 2025 நிலவரப்படி, இந்த அலுவலகம் 7,013 சந்தாதாரர் நிறுவனங்கள், 3,97,676 சந்தாதாரர்கள் மற்றும் 21,000 ஓய்வூதியதாரர்களைக் கொண்டுள்ளது.
புதிதாகக் கட்டப்பட்ட தொழிலாளர் வருங்கால வாய்ப்பு நிதி மண்டல அலுவலகம், சுமார் 10.12 கோடி ரூபாய் செலவில், மொத்தம் 1,723.46 சதுர மீட்டர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது. வருங்கால வாய்ப்பு நிதி சந்தாதாரர்கள், ஓய்வூதியதாரர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் ஊழியர்களின் தேவைகளைக் கருத்தில் கொண்டு கட்டப்பட்டுள்ள இந்தக் கட்டிடம் சூரிய மின்சக்தி நிலையம், மழைநீர் சேகரிப்பு அமைப்பு, மையப்படுத்தப்பட்ட குளிர் சாதன அமைப்பு, மின்சார ஜெனரேட்டர் மற்றும் கீழ்நிலை வாகன நிறுத்துமிடம் போன்ற நவீன மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த அம்சங்களைக் கொண்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2208131®=3&lang=1
***
TV/SV/SE
(रिलीज़ आईडी: 2208313)
आगंतुक पटल : 5