வடகிழக்குப் பகுதி வளர்ச்சி அமைச்சகம்
வடகிழக்கு மாநிலங்களில் வேளாண் சந்தை இணைப்புகளை வலுப்படுத்துவது குறித்த ஆய்வுக் கூட்டத்தில் மத்திய அமைச்சர் திரு ஜோதிராத்ய சிந்தியா பங்கேற்றார்
प्रविष्टि तिथि:
24 DEC 2025 4:05PM by PIB Chennai
நாட்டில் வடகிழக்குப் பகுதிகளில் வேளாண் உற்பத்திப் பொருட்களையும், தோட்டக்கலை சாகுபடி பொருட்களையும் சந்தைப்படுத்துவது தொடர்பான புதுதில்லியில் இன்று (24.12.2025) நடைபெற்ற உயர்மட்ட ஆய்வுக் குழுக் கூட்டத்தில் வடகிழக்கு பிராந்திய மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு ஜோதிராத்ய சிந்தியா பங்கேற்றார். இப்பகுதியில் உற்பத்தி செய்யப்படும் வேளாண் விளைப்பொருட்களை சந்தை இணைப்புகளை வலுப்படுத்தி, விவசாயிகளின் வருமானத்தை அதிகரிப்பது குறித்து இக்கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது.
அறுவடைக்கு பிந்தைய இழப்புகளைக் குறைத்தல், போக்குவரத்து செலவுகளைக் குறைத்தல், மதிப்புக் கூட்டுதல் ஆகியவை குறித்தும் இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. ஒருங்கிணைப்பை அதிகரிப்பது குறித்து விரிவான செயல்திட்டத்தை உருவாக்குவது தொடர்பாகவும் ஆலோசனை நடத்தப்பட்டது. இக்கூட்டத்தில் திரிபுரா முதலமைச்சர் திரு மாணிக் சகா, அசாம் வேளாண் அமைச்சர் திரு அதுல் போரா, சிக்கிம் வேளாண் அமைச்சர் திரு கேபிரியல் வான்சூ உள்ளிட்டோரும் வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த மூத்த அதிகாரிகளும் பங்கேற்றனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2208121®=3&lang=1
----
TV/PLM/KPG/SE
(रिलीज़ आईडी: 2208227)
आगंतुक पटल : 7