புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கம் அமைச்சகம்
இந்திய புள்ளியியல் நிறுவன மசோதா, 2025
प्रविष्टि तिथि:
24 DEC 2025 3:22PM by PIB Chennai
இந்திய புள்ளியியல் நிறுவனத்தை பதிவு செய்யப்பட்ட சங்கம் என்பதிலிருந்து சட்டப்பூர்வ நிறுவனமாக மாற்றியமைப்பதன் வாயிலாக, அதன் நிர்வாகக் கட்டமைப்பை மேம்படுத்தி, சக தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனங்களுடன் சீரமைக்கும் வகையில், 'இந்திய புள்ளியியல் நிறுவன மசோதா, 2025' வரைவை மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இந்த வரைவு மசோதா சட்டமாக இயற்றப்பட்டதும், இந்திய புள்ளியியல் நிறுவனம் சட்டம், 1959 மாற்றியமைக்கப்படும்.
இந்த வரைவு மசோதா கீழ்கண்ட வழிகாட்டுதல் கொள்கைகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது:
(அ) சிறப்புத் தரம்: கல்வித் திறம், உலகளாவிய போட்டித்தன்மை மற்றும் புதுமைக்கண்டுபிடிப்புகளை ஊக்குவித்தல்.
(ஆ) திறமையான நிர்வாகம்: தெளிவான நிறுவனக் கட்டமைப்புகளை நிறுவுதல், முடிவெடுக்கும் செயல்முறையை நெறிப்படுத்துதல் மற்றும் தலைமைத்துவம், நிர்வாகத்தில் நேர்மையை நிலைநிறுத்துதல்.
(இ) தன்னாட்சி: நிறுவனத்தின் அன்றாடச் செயல்பாடுகள் மற்றும் திட்டமிடல் நடவடிக்கைகளில் முடிவெடுக்கும் அதிகாரங்களை கூடுதலாக வழங்குதல்;
(ஈ) பொறுப்புக்கூறல்: வெளிப்படைத்தன்மை, மேற்பார்வை, துறை சார்ந்த பல்வேறு தரப்பினர்களுக்கு உதவுவதை உறுதி செய்தல்.
இந்த வரைவு மசோதா, இந்திய புள்ளியியல் நிறுவனச் சட்டம், 1959 என்ற தற்போதைய சட்டத்தை, ஐஐடி / ஐஐஎம் போன்ற பிற தேசிய அளவிலான முக்கியத்துவம் வாய்ந்த உயர் கல்வி நிறுவனங்களின் நிர்வாகச் சட்டங்களின் நிலைக்கு மேம்படுத்துவதற்காக ஒரு விரிவான புதிய சட்டத்தை அறிமுகப்படுத்துகிறது. இதன் நோக்கம், நிறுவனத்தின் தன்னாட்சி மற்றும் பொறுப்புணர்வை மேம்படுத்துவதன் மூலம் அதன் நிர்வாகக் கட்டமைப்பை முழுமையாக மாற்றியமைத்து நவீனமயமாக்குவதாகும். இந்த மசோதா, சம்பந்தப்பட்ட தரப்பினருடன் மேற்கொள்ளப்பட்ட ஆலோசனைக்குப் பிறகு, ஐஐடி / ஐஐஎம் போன்ற சக தேசிய முக்கியத்துவம் வாய்ந்த உயர் கல்வி நிறுவனங்களின் நிரூபிக்கப்பட்ட மாதிரி நடைமுறைகளைப் பின்பற்றி கவனமாகத் தயாரிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்திய புள்ளியியல் நிறுவனத்தின் சிறப்புத் தன்மையைக் கருத்தில் கொண்டு, தேவைப்படும் இடங்களில் மாற்றங்களும் செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த வரைவு மசோதா பல்வேறு நிலைகளில் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2208093®=3&lang=1
TV/SV/SE
(रिलीज़ आईडी: 2208225)
आगंतुक पटल : 6