ஜவுளித்துறை அமைச்சகம்
ஜவுளி அமைச்சகத்தின் 2025-ம் ஆண்டிற்கான மதிப்பாய்வு
ஜவுளி மற்றும் ஆயத்த ஆடை ஏற்றுமதி, 37.8 பில்லியன் அமெரிக்க டாலராக வளர்ச்சி
இடுகை இடப்பட்ட நாள்:
24 DEC 2025 1:10PM by PIB Chennai
2027-28 - ம் ஆண்டு வரை ஏழு ஆண்டுகளுக்கு 4,445 கோடி ரூபாய் ஒதுக்கீட்டில், உலகத் தரம் வாய்ந்த உள்கட்டமைப்பு வசதிகளுடன், ஏழு பிரதமரின் மெகா ஒருங்கிணைந்த ஜவுளி மண்டலம் மற்றும் ஆயத்த ஆடைப் பூங்காக்களை (பிஎம் மித்ரா) அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. பிஎம் மித்ரா பூங்காக்களை அமைப்பதற்காக விருதுநகர், தெலுங்கானா (வாராங்கல்), குஜராத் (நவ்சாரி), கர்நாடகா (கலபுரகி), மத்தியப் பிரதேசம் (தார்), உத்தரப் பிரதேசம் (லக்னோ) மற்றும் மகாராஷ்டிரா (அமராவதி) ஆகிய 7 இடங்களை மத்திய அரசு தேர்வு செய்துள்ளது.
இதுவரை, 27,434 கோடி ரூபாய்க்கும் அதிக மதிப்பில் முதலீட்டு வாய்ப்புகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளன. 100% நிலம் கையகப்படுத்தப்பட்டு சிறப்பு செயலாக்க நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இந்த இடங்களுக்கு மத்திய அரசால் ஒப்புதல் அளிக்கப்பட்ட பிறகு, உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவதற்காக 2,590.99 கோடி ரூபாய் மதிப்பிலான கட்டுமானப் பணிகள் மாநில அரசுகளால் தொடங்கப்பட்டுள்ளன.
அனைத்து பிஎம் மித்ரா ஜவுளிப் பூங்காக்களுக்கும் சுற்றுச்சூழல் அனுமதி பெறப்பட்டுள்ளது. மத்தியப் பிரதேச மாநிலம், தார் பகுதியில் அமையவுள்ள பூங்காவிற்கு பிரதமர் கடந்த செப்டம்பர் 17, 2025 அன்று அடிக்கல் நாட்டினார்.
மத்தியப் பிரதேசம், தமிழ்நாடு, தெலுங்கானா மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் உள்ள பிஎம் மித்ரா பூங்காக்களுக்கு 7,024 கோடி ரூபாய் மதிப்புள்ள விரிவான திட்ட அறிக்கைக்கு மத்திய அரசு அங்கீகாரம் அளித்துள்ளது.
மத்தியப் பிரதேசம் மற்றும் தமிழ்நாட்டில் உள்ள பிஎம் மித்ரா பூங்காக்களுக்கான நில ஒதுக்கீட்டுக் கொள்கைக்கும் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
ஆராய்ச்சி, சந்தை மேம்பாடு, கல்வி மற்றும் ஏற்றுமதி மேம்பாடு ஆகியவற்றில் கவனம் செலுத்தி, மத்திய அரசு 1,480 கோடி ரூபாய் ஒதுக்கீட்டில், தேசிய தொழில்நுட்ப ஜவுளி இயக்கத்தை தொடங்கியுள்ளது. இந்த இயக்கம் பல்வேறு தேசிய திட்டங்கள் மற்றும் முக்கியத்துவம் வாய்ந்த உத்திசார் துறைகளில் தொழில்நுட்ப ஜவுளிகளின் பயன்பாட்டை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த இயக்கம் 2026 - ம் ஆண்டு மார்ச் 31 - ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
சிறப்பு இழை மற்றும் அதன் பயன்பாடுகளில் (கார்பன் ஃபைபர் மற்றும் அராமிட், மாற்றுப் பொருட்கள், கலவைப் பொருட்கள், இயந்திரங்கள் உட்பட) 168 ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் திட்டங்களுக்கு 520 கோடி ரூபாய்க்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் 24 புத்தொழில் நிறுவனங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
ஜவுளிக்கான உற்பத்தியுடன் கூடிய ஊக்கத்தொகைத் திட்டம் முதலீடுகள், உற்பத்தி போன்றவற்றிற்கு உத்வேகம் அளிப்பதாக உள்ளது.
குறைந்தபட்ச ஆதரவு விலை கொள்முதல், டிஜிட்டல் மயமாக்கல் நடவடிக்கைகள், உற்பத்தித்திறன் முயற்சிகள் மூலம் விவசாயிகளுக்கு உதவிடும் வகையில் பருத்தித் துறை சீர்திருத்தங்கள் நடவடிக்கைகளிலும் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.
பாரத் டெக்ஸ் 2025, ஜவுளித்துறையின் வலிமை, புத்தாக்கம் மற்றும் உலகளவில் முன்னணி நாடாக இந்தியாவை நிலைநிறுத்துகிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் காணவும்:https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2208051®=3&lang=1
-----
TV/SV/SE
(வெளியீட்டு அடையாள எண்: 2208199)
வருகையாளர் எண்ணிக்கை : 37