சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
மூத்த குடிமக்கள் கண்ணியத்துடனும், தன்னம்பிக்கையுடனும் வாழ்வதற்கான நலத்திட்டங்கள்
प्रविष्टि तिथि:
23 DEC 2025 4:13PM by PIB Chennai
அனுபவம் பாரம்பரியம் மற்றும் மாண்புகளைக் கொண்டுள்ள மூத்த குடிமக்கள் வலிமையான நாட்டின் விலைமதிப்பற்ற ஆதாரமாக திகழ்கின்றனர் என்று மத்திய சுமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் திரு வீரேந்திர குமார் தெரிவித்துள்ளார். மத்தியப்பிரதேசம் மாநிலம் சட்டார்பூர் மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய அவர், சமூக அடிப்படையிலான முன்முயற்சிகள் மற்றும் தலைமுறைகளுக்கு இடையேயான நிகழ்ச்சிகள் வாயிலாக மூத்த குடிமக்களின் கண்ணியமான, சுகாதாரமான வாழ்கையை மேம்படுத்த வேண்டியது அவசியமானது என்று வலியுறுத்தினார்.
தேசிய மூத்த குடிமக்கள் நலத்திட்டத்தின் கீழ், அவர்களுக்கு கண் கண்ணாடி, காது கேட்புக் கருவிகள், நடக்க உதவிடும் கைத்தடிகள் போன்ற உபகரணங்களை வழங்குவது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதை அவர் சுட்டிக்காட்டினார். இது போன்ற உதவிகள் மூத்த குடிமக்களின் கண்ணியமான மற்றும் தன்னம்பிக்கையான வாழ்க்கைக்கும் உதவிகரமாக அமைந்திடும் என்று அவர் தெரிவித்தார். இத்திட்டத்தின் கீழ் நாடு முழுவதிலும் உள்ள 7.28 லட்சம் மூத்த குடிமக்கள் இதுவரை பயனடைந்துள்ளதாகவும் 14567 என்ற உதவி தொலைபேசி எண் மூலம் 27 லட்சத்துக்கும் அதிகமான தொலைபேசி அழைப்புகள் பெறப்பட்டு வழிகாட்டுதல்கள் மற்றும் அவசரகால உதவிகள் வழங்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
கலாச்சார, சமூக மற்றும் பொது நிகழ்ச்சிகள் வாயிலாக தலைமுறைகளுக்கு இடையேயான உறவுகளின் பிணைப்பை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மற்றும் பள்ளிகளில் மூத்த குடிமக்களைக் கொண்டாடுவதற்கான நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக அமைச்சர் திரு வீரேந்திரகுமார் தெரிவித்துள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2207735®=3&lang=1
***
SS/SV/KPG/SE
(रिलीज़ आईडी: 2207912)
आगंतुक पटल : 8