சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
வைரசால் ஏற்படும் பாதிப்புகளைத் தடுக்கும் முன்னேற்பாட்டு நடவடிக்கைகளில் மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்பட வேண்டும் – மத்திய அமைச்சர் திரு ஜெ பி நட்டா
प्रविष्टि तिथि:
23 DEC 2025 3:39PM by PIB Chennai
மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலம் அமைச்சகம் சார்பில் தேசிய நோய்க் கட்டுப்பாட்டு மையம் உலக சுகாதார அமைப்புடன் இணைந்து வைரஸ் தொற்றுக் காரணமாக ஏற்படும் காய்ச்சலைக் கட்டுபடுத்துவது குறித்த இரண்டு நாள் கருத்தரங்கு இம்மாதம் 22, 23 தேதிகளில் புதுதில்லியில் நடத்தியது. இந்தக் கருத்தரங்கில் வைரஸ் பாதிப்புகளை எதிர்கொள்வதற்கான தயார் நிலை குறித்த அமைச்சகங்களுக்கு இடையிலான ஒத்துழைப்புகளை வலுப்படுத்துவது குறித்தும் விவாதிக்கப்பட்டது. மத்திய சுகாதார அமைச்சகத்தின் பேரிடர் மேலாண்மை பிரிவு பிரதிநிதிகள் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் குழுமம், கால்நடை வளர்ப்புத் துறை மற்றும் கால்நடை நோய்க்கான உயர் பாதுகாப்பு குறித்த தேசிய நிறுவனம் ஆகியவற்றின் பிரதிநிதிகளும் இந்த சிந்தனையரங்கில் பங்கேற்றன.
பருவ காலங்களில் பரவும் இத்தகைய காய்ச்சலைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்தும் இது போன்ற சவால்களை எதிர்கொள்வதற்கான தயார் நிலையை வலுப்படுத்துவது குறித்தும் இதில் விவாதிக்கப்பட்டன.
இந்தக் கருத்தரங்கை காணொலிக் காட்சி மூலம் தொடங்கிவைத்து பேசிய மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் திரு ஜெ பி நட்டா, நோய்க் கட்டுப்பாட்டு தயார் நிலை மற்றும் மீட்பு நடவடிக்கைகளின் அவசியம் குறித்து வலியுறுத்தினார். வைரஸ் தொற்றால் ஏற்படும் பாதிப்புகளுக்கு எதிரான செயல்திட்டங்களை திறம்பட மேற்கொள்வது குறித்தும் அவர் வலியுறுத்தினார். ஒருங்கிணைந்த நோய்க் கண்காணிப்புத் திட்டத்தின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்த அவர், மத்திய – மாநில அரசுகள் இணைந்து நோய்த்தடுப்புக்கான கண்காணிப்பு அமைப்புகளின் செயல்பாடுகளை உறுதி செய்ய வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்:https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2207717®=3&lang=1
***
SS/SV/KPG/SE
(रिलीज़ आईडी: 2207873)
आगंतुक पटल : 10