PIB Headquarters
நுகர்வோர் நலன் மீதான உறுதிப்பாட்டை எடுத்துரைக்கும் தேசிய நுகர்வோர் தினம்
प्रविष्टि तिथि:
23 DEC 2025 1:35PM by PIB Chennai
நுகர்வோர் உரிமைகளின் முக்கியத்துவத்தையும் நுகர்வோர் பாதுகாப்பின் பரந்த கட்டமைப்பையும் எடுத்துக்காட்டும் வகையில், இந்தியாவில் ஆண்டுதோறும் டிசம்பர் 24-ம் தேதி தேசிய நுகர்வோர் தினம் கொண்டாடப்படுகிறது. நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம்- 1986, குடியரசுத்தலைவரின ஒப்புதலைப் பெற்று, நுகர்வோருக்கான விரிவான உரிமைகளை உறுதி செய்தது.
2025-ம் ஆண்டில் , தேசிய நுகர்வோர் தினம் "டிஜிட்டல் முறையிலான நுகர்வோர் நீதி அமைப்பின் மூலம் திறமையாக, விரைவாக தீர்வு காண்பது" என்ற கருப்பொருளில் கடைப்பிடிக்கப்படுகிறது. இது தொழில்நுட்பம் சார்ந்த வகையில் நுகர்வோர் குறைகளைத் தீர்ப்பதில் இந்தியாவின் தொடர்ச்சியான கவனத்தை பிரதிபலிக்கிறது.
நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் -2019, இந்தியாவில் நுகர்வோர் நலன்களைப் பாதுகாப்பதில் ஒரு குறிப்பிடத்தக்க சீர்திருத்தத்தை ஏற்படுத்தியது. 1986-ம் ஆண்டின் நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்திக்கு பதிலான இந்தச் சட்டம் தற்காலத்துக்கு ஏற்ப அமைந்துள்ளது. இந்தச் சட்டம், நுகர்வோர் நலனைப் பாதுகாக்கவும், வணிக பரிவர்த்தனைகளில் நேர்மையை ஊக்குவிக்கவும், பயனுள்ள குறை தீர்ப்பை உருவாக்கவும் முயல்கிறது. இந்தச் சட்டம் பல முக்கிய உரிமைகளுக்கு உத்தரவாதம் அளிக்கிறது. இதில் பொருட்கள் அல்லது சேவைகளின் தரம், அளவு, வலிமை, தூய்மை, தரநிலைகள் பற்றித் தெரிவிக்கப்படும் உரிமை நியாயமற்ற வர்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நுகர்வோரைப் பாதுகாக்கிறது.
நுகர்வோர் குறை தீர்ப்பில் மாவட்ட நுகர்வோர் தகராறு தீர்வு மன்றம், 50 லட்சம் ரூபாய் வரையிலான உரிமைகோரல்கள் தொடர்பான புகார்களை விசாரிக்கிறது.
மாநில நுகர்வோர் தகராறு தீர்வு ஆணையம் 50 லட்சம் ரூபாய்க்கும் அதிகமான, 2 கோடி ரூபாய் வரையிலான புகார்களைக் கையாள்கிறது.
தேசிய நுகர்வோர் தகராறு தீர்வு ஆணையம் 2 கோடி ரூபாய்க்கு மேல் மதிப்புள்ள புகார்களை கையாள்கிறது.
ஜூலை 2025 நிலவரப்படி, 10 மாநிலங்களும் , தேசிய நுகர்வோர் தகராறு தீர்வு ஆணையமும் 100 சதவீத தீர்வு விகிதத்தைப் பதிவு செய்தன.
ஜனவரி 1, 2025 அன்று தொடங்கப்பட்ட இ-ஜாக்ரிதி , இந்தியாவில் நுகர்வோர் குறை தீர்க்கும் டிஜிட்டல் தளமாக உருவெடுத்துள்ளது.
நவம்பர் 2025 நிலவரப்படி , இந்த தளம் 1.35 லட்சத்திற்கும் மேற்பட்ட வழக்கு தாக்கல்களை எளிதாக்கியுள்ளது. அத்துடன் 1.31 லட்சத்திற்கும் மேற்பட்ட வழக்குகளை தீர்க்க உதவியுள்ளது.
தேசிய நுகர்வோர் தினம், நுகர்வோர் உரிமைகளைப் பாதுகாப்பதிலும் சந்தையில் நம்பிக்கையை ஊக்குவிப்பதிலும் இந்தியாவின் தொடர்ச்சியான உறுதிப்பாட்டை எடுத்துக்காட்டுகிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பை காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2207673®=3&lang=1
***
SS/PLM/SE
(रिलीज़ आईडी: 2207868)
आगंतुक पटल : 13