பாதுகாப்பு அமைச்சகம்
மூன்றாவது நீர்மூழ்கி எதிர்ப்பு கப்பல் ‘அஞ்சதிப்’ இந்திய கடற்படையிடம் ஒப்படைக்கப்பட்டது
प्रविष्टि तिथि:
22 DEC 2025 5:13PM by PIB Chennai
மூன்றாவது நீர்மூழ்கி எதிர்ப்பு கப்பல் ‘அஞ்சதிப்’ இந்திய கடற்படையிடம் ஒப்படைக்கப்பட்டது. சென்னையில் 2025, டிசம்பர் 22 அன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் இது ஒப்படைக்கப்பட்டது. இக்கப்பலை கொல்கத்தாவில் உள்ள கார்டன் ரீச் கப்பல் வடிவமைப்பாளர்கள் மற்றும் பொறியாளர்கள் நிறுவனம் கட்டமைத்துள்ளது. காட்டுப்பள்ளியில் உள்ள எல் அண்ட் டி கப்பல் கட்டுமான நிறுவனம், கார்டன் ரீச் கப்பல் வடிவமைப்பாளர் மற்றும் பொறியாளர்கள் நிறுவனம் இணைந்து பொது - தனியார் கூட்டாண்மை அடிப்படையில் இக்கப்பலை வடிவமைத்துள்ளன. சுமார் 77 மீட்டர் நீளமுடைய இக்கப்பலில் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட நீர்மூழ்கி எதிர்ப்பு கப்பல் ராக்கெட் உள்ளிட்ட அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.
கடற்படையின் நீர்மூழ்கி எதிர்ப்பு நடவடிக்கை, கடலோர கண்காணிப்பு ஆகியவற்றை இது வலுப்படுத்தும். தற்சார்பு இந்தியா என்ற அரசின் தொலைநோக்குப் பார்வையை உறுதி செய்யும் வகையில் 80 சதவீதத்திற்கும் அதிகமான அளவில் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட உபகரணங்கள் மூலம் இந்த ‘அஞ்சதிப்’ கப்பல் வடிவமைக்கப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2207446®=3&lang=1
***
SS/IR/RK/SE
(रिलीज़ आईडी: 2207523)
आगंतुक पटल : 11