தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
தொலைதொடர்புத் துறையின் நிதிசார் மோசடி அபாய குறியீடு உதவியுடன் 6 மாதங்களில் 660 கோடி ரூபாய் அளவிலான ஆன்லைன் மோசடிகள் தடுக்கப்பட்டுள்ளன
प्रविष्टि तिथि:
22 DEC 2025 3:23PM by PIB Chennai
தொலைதொடர்புத் துறையில் நிதிசார் மோசடி அபாய குறியீடுகள், ஆன்லைன் நிதிசார் மோசடிகளையும் தடுக்கும் நடவடிக்கைகளில் குறிப்பிடத்தக்க வகையில் பங்களித்துள்ளது. இந்த குறியீடுகள் ரிசர்வ் வங்கி, தேசிய கட்டண பரிவர்த்தனைக் கழகம், பெரிய அளவிலான முன்னணி வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள், டிஜிட்டல் புலனாய்வு தளத்தில் மூன்றாம் நபரின் விண்ணப்பம் வழங்கும் நடைமுறைகள் ஆகியவற்றுக்கு பெரிதும் உதவியுள்ளதாக தொலைதொடர்புத் துறை தெரிவித்துள்ளது.
ஆயிரத்திற்கும் அதிகமான வங்கிகள் மூன்றாம் தரப்பு விண்ணப்பப் படிவம் வழங்கும் இணையதளங்கள், பணபரிவர்த்தனை நடைமுறைகளை செயல்படுத்தும் நிறுவனங்கள் ஆகியவை இந்த குறியீடுகளை பயன்படுத்த தொடங்கியுள்ளதாக தொலைதொடர்புத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிதிசார் மோசடி அபாயக் குறியீடுகளின் பயன்பாடுகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அதனை திறம்பட அமல்படுத்தவும் ஏதுவாக தொடர் பயிற்சி வகுப்புகளையும் தொலைத் தொடர்புதுறை நடத்தி வருகிறது.
இந்த நிதிசார் மோசடி அபாயக் குறியீடுகள் உதவியுடன் 6 மாதங்களில் 660 கோடி ரூபாய்க்கும் மேற்பட்ட இணையதள மோசடிகள் மூலம் ஏற்படும் இழப்புகள் தடுக்கப்பட்டுள்ளதாக தொலைத் தொடர்புத்துறை தெரிவித்துள்ளது.
பல்வேறு பொதுத்துறை மற்றும் தனியார் துறை வங்கிகள், கூட்டுறவு வங்கிகள் போன்ற நிதி நிறுவனங்கள் இந்த குறியீடுகளை பயன்படுத்தி அதிக எண்ணிக்கயிலான சந்தேகத்திற்கிடமான பரிவர்த்தனைகளை கண்டறிந்து செயலிழக்க செய்துள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்:
https://www.pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=2207376®=3&lang=1
***
SS/SV/LDN/KR
(रिलीज़ आईडी: 2207432)
आगंतुक पटल : 8