PIB Headquarters
வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ஊரக வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார சட்டம் 2025
प्रविष्टि तिथि:
22 DEC 2025 2:27PM by PIB Chennai
ஊரக வேலைவாய்ப்பு என்பது கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவில் மிக முக்கியத்துவம் வாய்ந்த சமூக பாதுகாப்பு கட்டமைப்பாக இருந்து வருகிறது.
கடந்த 2005-ம் ஆண்டு இயற்றப்பட்ட மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி சட்டம், கிராமப்புற மக்களுக்கு ஊதியத்துடன் கூடிய வேலைவாய்ப்பு வழங்குவதிலும், அவர்களது நிலையான வருவாய்க்கும் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை உருவாக்குவதிலும் முக்கிய பங்கு வகித்து வருகிறது.
எனினும் மாறிவரும் சூழலுக்கு ஏற்ப, ஊரக மேம்பாட்டிற்கான நோக்கங்கள் மற்றும் அமைப்பு முறைகள் மாற்றியமைக்கப்பட வேண்டியது அவசிமாகிறது. வருவாய் அதிகரிப்பு, போக்குவரத்து வசதிகளின் விரிவாக்கம், டிஜிட்டல் பரிவர்த்தனைகள், பல்லுயிர் பெருக்க நடவடிக்கைகள் ஊரக வேலைவாய்ப்பு மாற்றங்களை கொண்டுவந்துள்ளது.
இதன் பின்னணியில், வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ஊரக வேலைவாய்ப்பு உறுதி மற்றும் வாழ்வாதார இயக்க மசோதாவிற்கு குடியரசுத்தலைவர் ஒப்புதல் வழங்கியுள்ளார். இது ஊரக வேலைவாய்ப்பில் மாற்றங்களை கொண்டுவருவதற்கான முக்கியத்துவம் வாய்ந்த சட்டமாக அமைகிறது.
வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான இலக்குகளை எட்டுவதற்கு ஏதுவாக, நீண்டகால அடிப்படையில் ஊரக வேலைவாய்ப்பை ஒருங்கிணைத்து இந்த சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.
இந்த புதிய சட்டம், ஊரகப் பகுதிகளில் வசிக்கும் குடும்பங்களுக்கு வருவாய் பாதுகாப்பை வலுப்படுத்தும் வகையில், 125 நாட்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க உறுதி செய்கிறது. நான்கு முக்கிய பகுதிகளில் ஊரக உள்கட்டமைப்பு வசதிகளின் மேம்பாட்டு திட்டங்கள் ஊதியத்துடன் கூடிய வேலைவாய்ப்புடன் இணைக்கப்பட்டுள்ளது.
மத்திய - மாநில அரசுகள் இணைந்து இந்த திட்டத்தை செயல்படுத்துவதன் மூலம், திட்டங்களின் மதிப்பீடு மற்றும் அதனை நிறைவேற்றும் பொறுப்புணர்வுடன், குறித்த காலத்தில் நிறைவேற்றுவதற்கான வழிவகைகளும் இதில் உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
***
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2207351®=3&lang=1
SS/SV/LDN/KR
(रिलीज़ आईडी: 2207393)
आगंतुक पटल : 15