PIB Headquarters
ஷெட்யூல்டு பகுதிகளுக்கு பஞ்சாயத்து விரிவாக்கம் (பிஇஎஸ்ஏ) திருவிழா விசாகப்பட்டினத்தில் நடைபெறவுள்ளது
प्रविष्टि तिथि:
22 DEC 2025 10:55AM by PIB Chennai
ஷெட்யூல்டு பகுதிகளுக்கு பஞ்சாயத்து விரிவாக்கம் (பிஇஎஸ்ஏ) திருவிழாவை மத்திய பஞ்சாயத்து ராஜ் மற்றும் பழங்குடியினர் நல அமைச்சகம் ஆண்டுதோறும் டிசம்பர் 23, 24 ஆகிய இரண்டு நாட்கள் கொண்டாடுகிறது. ஷெட்யூல்டு பகுதிகளுக்கு பஞ்சாயத்து விரிவாக்கம் சட்டம், 1996 இயற்றப்பட்டதன் ஆண்டு தினத்தை இந்த விழா குறிக்கிறது. பஞ்சாயத்து ராஜ் விதிமுறைகள் ஷெட்யூல்டு வகுப்பினரின் நிலங்களுக்கு விரிவாக்கம் செய்யப்பட்டதன் மூலம் அவர்கள் தங்களுடைய நிலங்களிலிருந்து அகற்றப்படுவது அல்லது அந்நியப்படுத்தப்படுவதிலிருந்து பாதுகாக்கப்பட்டு, பழங்குடியினர் சமூகத்தினருக்கு இச்சட்டம் அதிகாரம் அளிக்கிறது.
2025-ம் ஆண்டு பிஇஎஸ்ஏ திருவிழா விசாகப்பட்டினத்தில் நடைபெறவுள்ளது. இச்சட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதும், ஷெட்யூல்டு பகுதிகளில் உள்ளாட்சி அமைப்புகளின் திறன்களை மேம்படுத்துவதும் இதன் நோக்கமாகும்.
இத்திருவிழாவில் சக்கி கேல், உப்பண்ணா பரேலு, சோலோ மற்றும் புளி மேகா, மல்லகம்பம், பிதூல், கெடி டவுட், சிகோர் ஆகிய பாரம்பரிய விளையாட்டுகள், கலாச்சார பாரம்பரியம், பழங்குடியின உணவுகள் ஆகியவை இடம்பெறும். தங்களுடைய பாரம்பரியங்களை கொண்டாடவும், பாதுகாக்கவும், மேம்படுத்தவும் தேசிய அளவில் அங்கீகரிக்கப்பட்ட தளத்தை உருவாக்குவதன் மூலம் பழங்குடியினர் சமூகத்திற்கு அதிகாரம் அளிப்பது இதன் நோக்கமாகும்.
இந்த பிஇஎஸ்ஏ சட்டம் கிராம சபைகளுக்கும், பஞ்சாயத்து அமைப்புகளுக்கும் அப்பகுதிகளில் தங்களுடைய பாரம்பரிய நிர்வாக முறைகளை கடைபிடிக்க கூடுதல் அதிகாரங்களை அளிக்கிறது.
பிஇஎஸ்ஏ சட்டத்தை திறம்பட அமல்படுத்த பஞ்சாயத்து அமைச்சகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இச்சட்டம் குறித்த தேசிய மற்றும் மாநில அளவிலான மாநாடுகளை நடத்துகிறது. அச்சட்டத்தின் விதிமுறைகள் குறித்து பயிற்சி அளிக்கிறது. மத்திய பஞ்சாயத்து ராஜ் அமைச்சகமும், ஏழு மாநிலங்களும் இச்சட்டம் குறித்த விதிமுறைகள் குறித்து தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கு பயிற்சி அளிக்க 2024 – 25 மாநில அளவிலான பயிற்சியை இரண்டு சுற்றுகளாக நடத்தியது. இதில் மாநில, மாவட்ட மற்றும் வட்டார அளவில் ஒரு லட்சத்திற்கும் அதிகமானவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2207293®=3&lang=1
***
SS/IR/RK/RK
(रिलीज़ आईडी: 2207314)
आगंतुक पटल : 14