எரிசக்தி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

வரைவு மின்சார சட்ட (திருத்த) மசோதா, 2025 குறித்த ஆலோசனைக் குழுக் கூட்டம் மத்திய அமைச்சர் திரு மனோகர் லால் தலைமையில் நடைபெற்றது

प्रविष्टि तिथि: 20 DEC 2025 5:33PM by PIB Chennai

மின்சார அமைச்சகத்தின் நாடாளுமன்ற ஆலோசனைக் குழுக் கூட்டம் 18 டிசம்பர் 2025 அன்று புதுதில்லியில் நடைபெற்றது. மத்திய மின்சாரம், வீட்டுவசதி, நகர்ப்புற விவகாரத் துறை அமைச்சர் திரு மனோகர் லால்  தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், இதில் மக்களவை மற்றும் மாநிலங்களவையைச் சேர்ந்த பல்வேறு அரசியல் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

பல்வேறு தரப்பினரின் ஆலோசனைக்காக அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட வரைவு மின்சாரச் சட்ட (திருத்த) மசோதாவில் உள்ள  முன்மொழிவுகள் குறித்து உறுப்பினர்களுடன் ஆலோசனை நடத்தும் வகையில் இக்கூட்டம் நடைபெற்றது.

வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான இலக்குகளின் பின்னணியில், நாட்டின் மின்சாரத் துறையின் சட்ட ரீதியான அடிப்படைக் கட்டமைப்பை வலுப்படுத்தும் நோக்கம் கொண்டிருப்பதால், மின்சாரச் சட்ட (திருத்த) மசோதா, 2025 தேசிய முக்கியத்துவம் வாய்ந்தது என்று அவர் எடுத்துரைத்தார். 2003 - ம் ஆண்டில் இந்தச் சட்டம் இயற்றப்பட்ட பிறகு, மின்சாரத் துறையின் அனைத்து அம்சங்களிலும் நாடு குறிப்பிடத்தக்க அளவில் முன்னேற்றம் அடைந்துள்ளது. இருப்பினும், குறிப்பாக, மின் விநியோகப் பிரிவில், தொடர் நிதி நெருக்கடி போன்ற சவால்கள் நீடித்து வருகின்றன.

செலவினங்களுக்கான கட்டணங்களை கட்டாயமாக்கவும், பயன்பாட்டு நிறுவனங்கள் கட்டண நிர்ணய விண்ணப்பங்களைத் தாமதப்படுத்தும்போது, ஆணையங்கள் தாமாகவே முன்வந்து நடவடிக்கை எடுக்க அதிகாரமளிக்கவும் மசோதாவில் உள்ள விதிகள் வகை செய்யும் என்று அவர் தெரிவித்தார். வீட்டு உபயோக மற்றும் விவசாயத்துக்கான நுகர்வு போன்ற நுகர்வோர் குழுக்களுக்கு முன்னுரிமை வழங்கும் வகையில் மாநில அரசுகள் தொடர்ந்து மானியங்களை வழங்கலாம் என்றும், அத்தகைய நுகர்வோருக்கு செலவில் எந்த உயர்வும் இருக்காது என்றும் அவர் தெளிவுபடுத்தினார். இது நிதி ஒழுங்குமுறை நடவடிக்கைகள் நுகர்வோர் நலனுடன் ஒன்று சேர்ந்து செல்வதை இந்த மசோதா உறுதி செய்கிறது. இந்த மசோதா நாட்டில் உள்ள  தொழில்துறையின் பொருளாதாரப் போட்டித்தன்மையை மேம்படுத்தவும் முயற்சிகள் மேற்கொள்ளவும் உதவுகிறது. மானியங்கள், கூடுதல் கட்டணங்களால் ஏற்படும் விளைவுகளைக் குறைப்பதன் மூலம், தொழில்துறை, குறிப்பாக குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் வேலைவாய்ப்பை விரிவுபடுத்தவும், உலகளவில் போட்டியிடவும் உதவிடுவதை இந்த மசோதா நோக்கமாகக் கொண்டுள்ளது. நாட்டின் அனைத்து மக்கள்தொழில்துறை நலனுக்காக, மின்சாரத்தின் விலையை நியாயமான அளவில் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டியதன்   அவசியத்தை திரு மனோகர் லால் வலியுறுத்தினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2206998&reg=3&lang=1

***

AD/SV/RJ


(रिलीज़ आईडी: 2207074) आगंतुक पटल : 11
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी