சுற்றுலா அமைச்சகம்
சுற்றுலாவை மேம்படுத்த, மத்திய சுற்றுலா அமைச்சகம் நகர அளவிலான மாநாட்டு ஊக்குவிப்புப் பிரிவுகளை அமைக்க உள்ளது
प्रविष्टि तिथि:
19 DEC 2025 3:38PM by PIB Chennai
மத்திய சுற்றுலா அமைச்சகம், இந்தியாவின் கூட்டங்கள், பயணங்கள், மாநாடுகள் மற்றும் கண்காட்சிகள் (எம்ஐசிஇ) சுற்றுலாச் சூழல் அமைப்பை கணிசமாக மேம்படுத்தும் நோக்கில், பங்குதாரர்களுடன் இணைந்து, 2026-ம் ஆண்டு முதல் நகர அளவிலான மாநாட்டு ஊக்குவிப்புப் பிரிவுகளை சுதந்திரமான அமைப்புகளாக நிறுவ உள்ளது.
புதுதில்லியில் இந்திய கண்காட்சித் தொழில் சங்கம் ஏற்பாடு செய்திருந்த உச்சி மாநாடு 2025-ஐ இன்று தொடங்கி வைத்துப் பேசிய மத்திய சுற்றுலா அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் மற்றும் தலைமை இயக்குநர் திரு. சுமன் பில்லா இந்தத் தகவலைத் தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் உரையாற்றிய திரு. பில்லா, இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு மாநிலங்கள் தங்களின் தனித்துவமான வழிகளில் சுற்றுலா வாய்ப்புகளைப் பயன்படுத்தி வருவதாகவும், இப்போது இந்தியாவை உலகளாவிய வரைபடத்தில் முக்கிய இடம்பிடிக்கச் செய்ய வேண்டிய நேரம் வந்துவிட்டது என்றும் கூறினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2206542®=3&lang=1
***
AD/PKV/SE
(रिलीज़ आईडी: 2206789)
आगंतुक पटल : 8