பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம்
தமிழ்நாட்டில் உள்ள கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளை வலுப்படுத்த, ரூ.127 கோடிக்கு மேல் நிதியை மத்திய அரசு விடுவித்துள்ளது
प्रविष्टि तिथि:
19 DEC 2025 5:19PM by PIB Chennai
2025-26-ம் நிதியாண்டில் தமிழ்நாட்டில் உள்ள கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் பஞ்சாயத்து ராஜ் நிறுவனங்களுக்கு ரூ.127.586 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது. இந்தத் தொகை, 2025-26-ம் ஆண்டிற்கான 15-வது நிதிக் குழுவின் கீழ் வழங்கப்படும் மானியங்களின் இரண்டாவது தவணையாகும். முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைப்புகளைக் கொண்டுள்ள மற்றும் பரிந்துரைக்கப்பட்ட தகுதி நிபந்தனைகளைப் பூர்த்தி செய்யும் 9 மாவட்ட பஞ்சாயத்துகள், 74 வட்டார பஞ்சாயத்துகள் மற்றும் 2,901 கிராம பஞ்சாயத்துகளுக்கு இந்த மானியங்கள் விடுவிக்கப்பட்டுள்ளன.
மத்திய அரசின் பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் மற்றும் ஜல் சக்தி அமைச்சகம் மூலம், கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகள் / பஞ்சாயத்து ராஜ் நிறுவனங்களுக்கான 15-வது நிதிக் குழு மானியங்களை மாநிலங்களுக்கு விடுவிக்க அரசு பரிந்துரைக்கிறது, பின்னர் அவை நிதி அமைச்சகத்தால் விடுவிக்கப்படுகின்றன. ஒதுக்கப்பட்ட மானியங்கள் ஒரு நிதியாண்டில் 2 தவணைகளாகப் பரிந்துரைக்கப்பட்டு விடுவிக்கப்படுகின்றன. இந்த நிபந்தனையில்லாத மானியங்கள், ஊதியங்கள் மற்றும் பிற செலவுகளைத் தவிர, அரசியலமைப்பின் பதினொன்றாவது அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள இருபத்தி ஒன்பது துறைகளின் கீழ், அந்தந்தப் பகுதிக்குத் தேவையான தேவைகளுக்காக கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகள் / பஞ்சாயத்து ராஜ் நிறுவனங்களால் பயன்படுத்தப்படும். இந்த நிதியை, சுகாதாரம் மற்றும் திறந்தவெளி கழிப்பிடம் இல்லாத நிலையைப் பராமரித்தல், குடிநீர் வழங்கல், மழைநீர் சேகரிப்பு மற்றும் நீர் மறுசுழற்சி போன்ற அடிப்படை சேவைகளுக்காகப் பயன்படுத்தலாம்.
********
SS/PKV/SE
(रिलीज़ आईडी: 2206727)
आगंतुक पटल : 25