சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

வெள்ள அச்சத்திலிருந்து விடுதலை : கோசி ஆற்றின் மீது கட்டப்பட்ட பாலம் நம்பிக்கையின் அடையாளமாக திகழ்கிறது

प्रविष्टि तिथि: 19 DEC 2025 2:50PM by PIB Chennai

பல தசாப்தங்களாக வெள்ளம்தனிமை மற்றும் நீண்ட மாற்றுப் பாதைகளுடன் போராடி வந்த பீகார் மாநிலத்தில் கோசி ஆற்றின் கரையோர மக்களின் கனவு நனவாகி உள்ளது. 13.3 கிலோமீட்டர் நீளமுள்ள பேஜா–பகௌர் கோசி பாலம் இப்போது அதன் கட்டுமானத்தின் இறுதி கட்டத்தில் உள்ளது. இது பயன்பாட்டிற்கு வந்தவுடன்கோசி ஆற்றின் மீதான இந்தப் பாலம் பயணத் தூரத்தை 44 கிலோமீட்டர் குறைத்துவெள்ளத்தால் பாதிக்கப்பட்டபின்தங்கிய மதுபானி மற்றும் சுபௌல் பகுதிகளை தேசிய நெடுஞ்சாலை - 27 மற்றும் பாட்னாவுடன் நேரடியாக இணைக்கும். இது நேபாளம் மற்றும் வடகிழக்கு மாநிலங்களுக்குத் தடையற்ற பாதைகளையும் திறந்துஎல்லை தாண்டிய வர்த்தகம்பிராந்திய வணிகம் மற்றும் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட முதலீடுகளை ஊக்குவிக்கும். இந்த பணிகள்பாரத்மாலா பரியோஜனா முதற்கட்டத் திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படுகிறது. ரூ. 1101.99 கோடி முதலீட்டில் கட்டப்படும் இந்தப் பாலம்இப்பகுதியில் இணைப்பை மாற்றுவதற்கான ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையாகத்  திகழ்கிறது. மேலும்இந்தத் திட்டம் 2026-2027 நிதியாண்டில் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2206497&reg=3&lang=1

***

VT/PKV/SE


(रिलीज़ आईडी: 2206698) आगंतुक पटल : 9
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी