சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தேசிய பல்லுயிர் பெருக்க ஆணையம், ஆந்திரப்பிரதேச வனத்துறைக்கு அணுகல் மற்றும் பயன் பங்கீடு நிதியாக ரூ.14.88 கோடியை விடுவித்துள்ளது

प्रविष्टि तिथि: 19 DEC 2025 12:05PM by PIB Chennai

தேசிய பல்லுயிர் பெருக்க ஆணையம், ஆந்திரப்பிரதேச வனத்துறைக்கு அணுகல் மற்றும் பயன் பங்கீடு நிதியாக ரூ.14.88 கோடியை (1.65 மில்லியன் அமெரிக்க டாலர்) விடுவித்துள்ளது.  செம்மரங்கள் தொடர்பான பாதுகாப்பு, பராமரிப்பு, மறு உற்பத்தி, ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, விழிப்புணர்வு உருவாக்கம், திறன் மேம்பாட்டு நிகழ்ச்சிகள் நடத்துதல் ஆகியவற்றுக்காக இந்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இத்துடன் அணுகல் மற்றும் பயன் பங்கீட்டுக்காக  நாடு முழுவதும் மொத்தம் விடுவிக்கப்பட்ட நிதி ரூ.143 கோடியைக் (15.8 மில்லியன் அமெரிக்க டாலரை) கடந்துள்ளது. தற்போது வரை  செம்மரங்கள் பாதுகாப்பிற்காக ஆந்திரப்பிரதேசத்திற்கு தேசிய பல்லுயிர் பெருக்க ஆணையம் ரூ.104 கோடி (12.5 மில்லியன் அமெரிக்க டாலர்) விடுவித்துள்ளது. தமிழ்நாடு, கர்நாடகா, மகாராஷ்டிரா, ஒடிசா, தெலங்கானா போன்ற பல்வேறு மாநிலங்களுக்கு ரூ.15 கோடி (1.8 மில்லியன் அமெரிக்க டாலர்) விடுவிக்கப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2206421&reg=3&lang=1 

********


SS/SMB/KPG/EA


(रिलीज़ आईडी: 2206558) आगंतुक पटल : 12
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी