நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

நாடாளுமன்ற விவகார அமைச்சகம் ஏழு முக்கிய டிஜிட்டல் தளங்களை முழுமையாகப் பயன்படுத்தி, தனது செயல்பாடுகளை காகிதமற்றதாக மாற்றியுள்ளது

प्रविष्टि तिथि: 18 DEC 2025 12:49PM by PIB Chennai

நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சகம்ஏழு முக்கிய டிஜிட்டல் தளங்களை முழுமையாகப் பயன்படுத்திதனது செயல்பாடுகளை ஒரு காகிதமற்ற சூழல் அமைப்பாக மாற்றியுள்ளது. அனைத்து கோப்பு நகர்வுகள் மற்றும் ஒப்புதல்களுக்கான முதுகெலும்பாகச் செயல்படும் இ-ஆஃபீஸ்அனைத்து சேவை மற்றும் மனிதவள மேலாண்மை விஷயங்களையும் தடையின்றி கையாள்வதற்கான இ-எச்ஆர்எம்எஸ்ஆலோசனைக் குழு கூட்டங்களின் முழுமையான டிஜிட்டல் நிர்வாகத்திற்கான ஆலோசனைக் குழு மேலாண்மை அமைப்புவெளிப்படையான கொள்முதல் மற்றும் சொத்து கண்காணிப்புக்கான உரிமைகோரல்கள் மற்றும் சரக்கு மேலாண்மை அமைப்புமாநில/யூனியன் பிரதேச சட்டமன்றங்களில் சட்டமியற்றும் டிஜிட்டல் பணிப்பாய்வுகளுக்கான தேசிய இ-விதான் விண்ணப்பம் நாடாளுமன்ற உறுதிமொழிகளை நிகழ்நேரத்தில் கண்காணிப்பதற்கான ஆன்லைன் உறுதிமொழி கண்காணிப்பு அமைப்புபிரத்யேக தேசிய இளைஞர் நாடாளுமன்றத் திட்ட இணையதளம் ஆகியவை இந்த தளங்களாகும்.

இந்த விரிவான டிஜிட்டல் மாற்றங்களின் நேரடிப் பலன்கள் தெளிவாகத் தெரிகின்றன. நிலுவையில் உள்ள பணிகள் முழுமையாக நீக்கப்படுவதுடன்வெளிப்படைத்தன்மைக்கு வழிவகுக்கிறது. பிழையற்ற மற்றும் எளிதில் மீட்டெடுக்கக்கூடிய மின்னணுப் பதிவு பராமரிப்புசெயலாக்க நேரத்தில் ஒரு குறிப்பிடத்தக்க குறைவு ஆகியவை இதன் நன்மைகளாகும்.

இந்தத் தகவலை நாடாளுமன்ற விவகாரம்,  சட்டம் மற்றும் நீதித்துறைக்கான (தனிப் பொறுப்பு) இணையமைச்சர் திரு அர்ஜுன் ராம் மேக்வால் நேற்று மக்களவையில் எழுத்துப்பூர்வமான பதிலில் தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2205750&reg=3&lang=1

***

SS/PKV/SE


(रिलीज़ आईडी: 2206314) आगंतुक पटल : 7
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी