பாதுகாப்பு அமைச்சகம்
பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் நெதர்லாந்து வெளியுறவு அமைச்சருடன் இருதரப்பு விவகாரங்கள் குறித்து விவாதித்தார்
प्रविष्टि तिथि:
18 DEC 2025 3:05PM by PIB Chennai
புதுதில்லி வந்துள்ள நெதர்லாந்து வெளியுறவு அமைச்சர் திரு டேவிட் வேன் வீலை 2025, டிசம்பர் 18 அன்று பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் சந்தித்தார். பாதுகாப்பு உபகரண உற்பத்தியில் இணைந்து செயல்படுதல் உள்ளிட்ட ராணுவ விவகாரங்கள் மற்றும் இருதரப்பு பாதுகாப்பு குறித்து இரு அமைச்சர்களும் விவாதித்தனர். இருநாட்டு ராணுவ ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கு அப்போது அவர்கள் ஒப்புக்கொண்டனர். தடையற்ற, வெளிப்படையான, உள்ளடக்கிய மற்றும் விதிகள் அடிப்படையிலான இந்தோ பசிபிக் பிராந்தியத்தில் இந்தியா நெதர்லாந்து இடையேயான பகிரப்பட்ட உறுதிப்பாட்டை இந்த விவாதம் சுட்டிக்காட்டியது. பாதுகாப்பு தளவாடங்கள் உற்பத்தி தொழில்துறை மற்றும் பாதுகாப்பு கூட்டாண்மையில் இணைந்து நெருங்கி செயல்பட வேண்டியதன் அவசியம் குறித்து அமைச்சர்கள் வலியுறுத்தினார்கள். இரு நாட்டு அமைச்சர்கள் முன்னிலையில் பாதுகாப்பு ஒத்துழைப்பு தொடர்பான ஒப்பந்தத்திற்கு முந்தைய கடிதத்தை பாதுகாப்புத்துறை செயலாளர் திரு ராஜேஷ்குமார் சிங் மற்றும் நெதர்லாந்து தூதர் திருமிகு மரிசா ஜெரார்ட்ஸ் பரிமாறிக்கொண்டனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2205823®=3&lang=1
***
SS/IR/RK/SE
(रिलीज़ आईडी: 2206195)
आगंतुक पटल : 9