குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
ஸ்ரீ குரு தேக் பகதூரின் 350-வது தியாக தினத்தை நினைவுகூரும் சர்வமத மாநாட்டில் உலகளாவிய அமைதி மற்றும் மத நல்லிணக்கத்திற்கு குடியரசு துணைத்தலைவர் அழைப்பு விடுத்துள்ளார்
प्रविष्टि तिथि:
17 DEC 2025 7:22PM by PIB Chennai
ஸ்ரீ குரு தேக் பகதூரின் 350-வது தியாக தினத்தை நினைவுகூரும் வகையில், புதுதில்லியில் நடைபெற்ற சர்வமத மாநாட்டில் குடியரசு துணைத்தலைவர் திரு சி.பி. ராதாகிருஷ்ணன் இன்று உரையாற்றினார். ஸ்ரீ குரு தேக் பகதூரை, அவர் தைரியத்தின் கலங்கரை விளக்கமாக வர்ணித்தார். அவரது வாழ்க்கையும், தியாகமும் ஒட்டுமொத்த மனிதகுலத்திற்கும் சொந்தமானது என்று குறிப்பிட்டார்.
ஸ்ரீ குரு தேக் பகதூர், தனது உயிரை அரசியல் அதிகாரத்திற்காகவோ, ஒரு நம்பிக்கையின் மேலாதிக்கத்திற்காகவோ அல்லாமல், தனிநபர்கள் உணர்வுபூர்வமாக வாழவும், வழிபடவும் வழிவகை செய்யும் உரிமையைப் பாதுகாப்பதற்காகவே தியாகம் செய்தார் என்று அவர் குறிப்பிட்டார். மிகுந்த சகிப்புத்தன்மையற்ற நேரத்தில், துன்புறுத்தப்பட்டவர்களுக்கு அவர் ஒரு கேடயமாக உயர்ந்து நின்றார் என்று குடியரசு துணைத்தலைவர் மேலும் கூறினார்.
வேற்றுமையில் ஒற்றுமை என்பதே இந்தியாவின் வலிமையாக எப்போதுமே இருந்து வருகிறது என்பதை அடிக்கோடிட்டுக் காட்டிய குடியரசு துணைத்தலைவர், பண்டைய காலங்களிலிருந்து, பாரதம் பல்வேறு நம்பிக்கைகள், தத்துவங்கள் மற்றும் கலாச்சாரங்களை வரவேற்றுள்ளது என்றும், பின்னர் அவர் அரசியலமைப்பை உருவாக்கியவர்களால் சிந்தனை, வெளிப்பாடு, நம்பிக்கை மற்றும் வழிபாட்டு சுதந்திரத்தை உறுதி செய்யும் அடிப்படை உரிமைகள் மூலம் நாடு போற்றப்பட்டது என்றும் அவர் கூறினார்.
இந்தியாவை பல்வேறு மொழிகள், கலாச்சாரங்கள், மரபுகள் மற்றும் நம்பிக்கைகளைக் கொண்ட தேசமாக வர்ணித்த குடியரசு துணைத்தலைவர், "ஒரே பாரதம், உன்னத பாரதத்தை” வலியுறுத்தும் பிரதமர் திரு நரேந்திர மோடியின் அழைப்பை, இந்தியாவின் நாகரிக ஆன்மாவில் வேரூன்றிய ஒரு தொலைநோக்குப் பார்வையாகக் குறிப்பிட்டார். 2047-ம் ஆண்டு வளர்ச்சியடைந்த பாரதம் என்ற இலக்கை அடைவதற்கான கூட்டு முயற்சிகளை அவர் வலியுறுத்தினார்.
"யாதும் ஊரே, யாவரும் கேளிர்" என்ற பண்டைய தமிழ் பழமொழியை மேற்கோள் காட்டிய குடியரசு துணைத்தலைவர், இந்தியாவின் நாகரிக நெறிமுறைகள், உலகளாவிய நல்லிணக்கத்தைத் தொடர்ந்து ஊக்குவிக்கின்றன என்று கூறினார். ஸ்ரீ குரு தேஜ் பகதூரின் தியாகம், பரஸ்பர மரியாதை மற்றும் புரிதல் மூலம் கட்டமைக்கப்படும் இந்தியாவின் உணர்வுடன் ஆழமாக எதிரொலிக்கிறது என்று அவர் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2205494®=3&lang=1
***
(Release ID: 2205494)
AD/BR/SE
(रिलीज़ आईडी: 2205657)
आगंतुक पटल : 10