உள்துறை அமைச்சகம்
இடதுசாரி தீவிரவாதத்தின் தாக்கங்கள்
प्रविष्टि तिथि:
17 DEC 2025 3:33PM by PIB Chennai
இந்திய அரசியலமைப்பின் ஏழாவது அட்டவணையின்படி, காவல்துறை மற்றும் பொது ஒழுங்கு ஆகிய துறைகள் மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் உள்ளன. இருப்பினும், இடதுசாரி தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட மாநிலங்கள் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு மத்திய அரசு பல்வேறு உதவிகளை வழங்கி வருகிறது. இடதுசாரி தீவிரவாத அச்சுறுத்தலை முழுமையாக சமாளிக்க ஏதுவாக, "இடதுசாரி தீவிரவாதத்தை எதிர்கொள்வதற்கான தேசிய கொள்கை மற்றும் செயல் திட்டம்" 2025 - ம் ஆண்டில் அங்கீகரிக்கப்பட்டது. இது பாதுகாப்பு தொடர்பான நடவடிக்கைகள், மேம்பாட்டுப் பணிகள், உள்ளூர் சமூகங்களின் உரிமைகள் மற்றும் சலுகைகளை உறுதி செய்தல் போன்ற பல்வேறு உத்திகளை உள்ளடக்கியுள்ளது. 2015 -ம் ஆண்டு உருவாக்கப்பட்ட தேசிய கொள்கை மற்றும் செயல் திட்டத்தை முனைப்புடன் செயல்படுத்தியதன் விளைவாக, வன்முறை சம்பவங்கள் வெகுவாகக் குறைந்துள்ளதுடன், அதன் பரவலும் குறைந்துள்ளது. உள்நாட்டுப் பாதுகாப்பிற்கு தீவிர அச்சுறுத்தலாக இருந்த இடதுசாரி தீவிரவாதம், அண்மைக் காலங்களில் கணிசமாகக் கட்டுப்படுத்தப்பட்டு, ஒரு சில பகுதிகளுக்குள் மட்டுமே சுருக்கப்பட்டுள்ளது. இடதுசாரி தீவிரவாதிகளால் நிகழ்த்தப்பட்ட வன்முறைச் சம்பவங்கள் 2010-ம் ஆண்டில் உச்சபட்சமாக 1936-ஆக இருந்தது. இந்த எண்ணிக்கை 89% குறைந்து, 2025-ல் 222-ஆகக் குறைந்துள்ளது. தீவிரவாத சம்பவங்கள் காரணமாக பொதுமக்கள் மற்றும் பாதுகாப்புப் படையினரின் உயிரிழப்புகள் 2010-ஆம் ஆண்டில் அதிகபட்சமாக 1005-ஆக இருந்தது, இந்த விகிதம் 91% குறைந்து, 2025-ல் 95-ஆகக் குறைந்துள்ளது. இடதுசாரி தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களின் எண்ணிக்கை ஏப்ரல்-2018-ல் 126 என்ற எண்ணிக்கையிலிருந்து 90 ஆகவும், ஜூலை-2021-ல் 70 ஆகவும், ஏப்ரல்-2024-ல் 38 ஆகவும், ஏப்ரல்-2025-ல் 18 ஆகவும், அக்டோபர்-2025-ல் 11 ஆகவும் குறைந்துள்ளது. தற்போது 3 மாவட்டங்கள் மட்டுமே இடதுசாரி தீவிரவாதத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. பழங்குடியினர் மற்றும் தொலைதூரப் பகுதிகளில் வசிக்கும் மக்களின் மேம்பாட்டில் மத்திய அரசு கவனம் செலுத்துவதன் மூலம், நக்சல் தீவிரவாதத்தின் மூல காரணத்தைக் கண்டறிந்து தீர்வு காணப்பட்டுள்ளது. மேம்படுத்தப்பட்ட சட்டம் மற்றும் ஒழுங்கு, பாதுகாப்புச் சூழல், உள்கட்டமைப்பு வசதிகளின் மேம்பாட்டிற்கான முதலீடுகளுடன் இணைந்து, பொதுத்துறை / தனியார் பங்களிப்புடன் மேம்பட்ட பொருளாதார வளர்ச்சிக்கு உகந்த சூழலை உருவாக்கியுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2205200
***
(Release ID: 2205200)
AD/SV/SE
(रिलीज़ आईडी: 2205654)
आगंतुक पटल : 8