மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம்
தமிழ்நாட்டில் இரண்டு இடங்களில் மின்னணு உற்பத்தி தொகுப்புகள் திட்டத்திற்கு ஒப்புதல்
प्रविष्टि तिथि:
17 DEC 2025 12:50PM by PIB Chennai
மாற்றியமைக்கப்பட்ட மின்னணு உற்பத்தி தொகுப்பு 2.0 திட்டத்தை 2020 ஏப்ரலில் மத்திய அரசு அறிவித்தது. உலகத்தரம் வாய்ந்த மின்னணு உற்பத்தி உள்கட்டமைப்பை உருவாக்குவதை இத்திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது. இது வரை 11 மின்னணு உற்பத்தி தொகுப்புகள் மற்றும் 2 பொதுவசதி மையத்திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. மொத்தம் 4,399.68 ஏக்கர் பரப்பளவிலான இத்திட்டம் ரூ.5,222.49 கோடி செலவுடையதாகும். இதில் மத்திய அரசின் நிதியுதவி ரூ.2,492.74 கோடியாகும். இத்திட்டங்கள் 10 மாநிலங்களில் ரூ.1,46,846 கோடி முதலீட்டுடன் செயல்படுத்தப்படுகிறது. இதன் மூலம் சுமார் 1.80 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் தாலுக்காவில் பிள்ளைப்பாக்கம் கிராமத்தில் 379.30 ஏக்கர் பரப்பளவில் ரூ.424.55 கோடி செலவிலும், திருவள்ளூர் மாவட்டம் மணலூரில் 474.30 ஏக்கர் பரப்பளவில் ரூ.584.47 கோடி செலவிலும் மின்னணு உற்பத்தி தொகுப்புகள் 2.0 திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
இத்தகவலை மக்களவையில் இன்று மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை இணையமைச்சர் திரு ஜிதின் பிரசாதா தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2205046®=3&lang=1
***
SS/IR/KPG/SE
(रिलीज़ आईडी: 2205615)
आगंतुक पटल : 15