மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சகம்
தமிழ்நாட்டில் மூன்று ஆண்டுகளில் 16,76,098 மீனவர்கள் மற்றும் மீன் விவசாயிகளுக்கு காப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டுள்ளது
प्रविष्टि तिथि:
17 DEC 2025 12:38PM by PIB Chennai
மீன்வளத்துறை, கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வள அமைச்சகத்தால் செயல்படுத்தப்படும் பிரதமரின் மீன்வளத் திட்டம், மீன்வளம் மற்றும் மீன்வளர்ப்பு உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்குவதில் கவனம் செலுத்துகிறது. பிரதமரின் மீன்வளத் திட்டத்தின் கீழ் ஆதரிக்கப்படும் மீன்வள உள்கட்டமைப்பில் முதன்மையாக மீன்பிடி துறைமுகங்கள் மற்றும் மீன் தரையிறங்கும் மையங்கள், ஐஸ் தயாரிப்பு தொழிற்சாலைகள், குளிர்பதன கிடங்குகள், மொத்த மற்றும் சில்லறை சந்தைகள் மற்றும் மீன் சந்தைகள், ஒருங்கிணைந்த நீர் பூங்காக்கள், தீவன தயாரிப்பு தொழிற்சாலைகள், குஞ்சு பொரிக்கும் நிலையங்கள், குஞ்சு பொரிக்கும் வங்கிகள், உயிருள்ள மீன் விற்பனை மையங்கள், காலநிலையை தாங்கும் கடலோர மீன்பிடி கிராமங்கள், செயற்கை பாறைகள் போன்றவை அடங்கும். பிரதமரின் மீன்வளத் திட்டத்தின் கீழ் இந்த உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக பல்வேறு மாநில அரசு மற்றும் யூனியன் பிரதேசங்களின் ரூ.7501 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு மத்திய அரசின் மீன்வளத் துறை ஒப்புதல் அளித்துள்ளது.
மத்திய அரசின் மீன்வளத் துறை, மீனவர்கள், மீன் விவசாயிகள் மற்றும் மீன்பிடி தொழிலாளர்கள் போன்றோரின் சமூகப் பாதுகாப்பிற்கு மிக முக்கியத்துவம் அளிக்கிறது. கடந்த மூன்று ஆண்டுகளில், 1,03,47,716 மீனவர்கள் மற்றும் மீன் விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் சராசரியாக 34,49,238 மீனவர்கள் காப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டுள்ளது.
இதே கால கட்டத்தில் (2022-23 5,43,949, 2023-24 5,58,966, 2024-25 5,73,183) தமிழ்நாட்டில் மொத்தம் 16,76,098 மீனவர்கள் மற்றும் மீன் விவசாயிகளுக்கு காப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் 2022-23-ல் 34,200, 2023-24 34,349, 2024-25 34,608 என மொத்தம் 103157 மீனவர்கள் மற்றும் மீன் விவசாயிகளுக்கு காப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டுள்ளது.
மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வள அமைச்சர் திரு ராஜீவ் ரஞ்சன் சிங் என்கிற லாலன் சிங், மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையில் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்:https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2205036®=3&lang=1
***
SS/SMB/SE
(रिलीज़ आईडी: 2205539)
आगंतुक पटल : 14