பழங்குடியினர் நலத்துறை அமைச்சகம்
பழங்குடியின மாணவர்களுக்கான தேசிய கல்விச் சங்கத்தின் மாநாடு சிறந்த கல்வி மற்றும் நிர்வாக நடைமுறைகளுக்கான பாதையை வகுக்கிறது
प्रविष्टि तिथि:
17 DEC 2025 12:25PM by PIB Chennai
பழங்குடியின மாணவர்களுக்கான தேசிய கல்விச் சங்கம், பள்ளிகளின் திறமையான மேலாண்மை நடவடிக்கைகள் குறித்த இரண்டாவது ஏகலைவா மாதிரி உண்டு உறைவிடப் பள்ளிகளின் முதல்வர்கள் மாநாட்டை, டிசம்பர் 16-17, தேதிகளில் நடத்தியது. புதுதில்லியில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சர்வதேச மையத்தில் நடைபெற்ற இந்த இரண்டு நாள் தேசிய மாநாட்டில், நாடு முழுவதிலும் உள்ள ஏகலைவா மாதிரி உண்டு உறைவிடப் பள்ளிகளின் முதல்வர்கள் மற்றும் பொறுப்பு முதல்வர்கள் பங்கேற்றனர். இந்த மாநாட்டில் ஏகலைவா மாதிரி உண்டு உறைவிடப் பள்ளிகளில், கல்வி நிறுவனங்களில் தலைமைத்துவப் பண்பு, நிர்வாக அமைப்புகள் மற்றும் அவற்றின் செயல்பாடுகளை வலுப்படுத்துவது போன்ற அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.
இந்த மாநாடு, மத்திய பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் திரு ஜுவல் ஓரம் தலைமை விருந்தினராகவும், அத்துறைக்கான இணை அமைச்சர் திரு துர்கா தாஸ் உய்கே சிறப்பு விருந்தினராகவும், அமைச்சகம் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கான தேசியக் கல்விச் சங்கத்தின் மூத்த அதிகாரிகள் முன்னிலையிலும் நடைபெற்றது.
பழங்குடியின மாணவர்களுக்கான தேசியக் கல்விச் சங்கத்தைச் சேர்ந்த கூடுதல் ஆணையரின் வரவேற்புரையுடன் இந்த மாநாடு தொடங்கியது. அவர் மாநாட்டின் நோக்கங்களை எடுத்துரைத்து, ஏகலைவா மாதிரி உண்டு உறைவிடப் பள்ளிகளில் தரமான கல்வி வழங்குவது, மாணவர் நலன் மற்றும் கல்வி நிர்வாகத்தை வலுப்படுத்துவதில் பள்ளி முதல்வர்களின் முக்கியப் பங்கு குறித்து எடுத்துரைத்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2205034®=3&lang=1
***
SS/SV/SE
(रिलीज़ आईडी: 2205537)
आगंतुक पटल : 11