மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சகம்
குஜராத்தில் மீன் வளர்ப்பு நடவடிக்கைகளும் திட்டங்களும்
प्रविष्टि तिथि:
17 DEC 2025 12:23PM by PIB Chennai
குஜராத் உட்பட அனைத்து மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களிலும் மீன்வளத்தின் முழுமையான மேம்பாட்டிற்காக பல்வேறு திட்டங்களை மத்திய மீன்வளத் துறை செயல்படுத்தி வருகிறது. 2025–26-ல், மாநில அரசு ரூ. 160 கோடி மொத்த பட்ஜெட்டில் பல்வேறு கடலோர மீன்வளர்ப்பு நலத் திட்டங்களை செயல்படுத்தியதாக குஜராத் அரசு தெரிவித்துள்ளது. இந்தக் காலகட்டத்தில், நிலையான மீன்வளர்ப்பு நடைமுறைகளை மேம்படுத்துவதற்காக காமதேனு பல்கலைக்கழகம் மற்றும் ஐசிஏஆர்-சிபாவுடன் இணைந்து குஜராத் அரசு பல பயிற்சி வகுப்புகளை நடத்தியது.
குஜராத்தில் பால் கூட்டுறவு சங்கங்களை வலுப்படுத்துவதற்கும் உள்கட்டமைப்பை உருவாக்குவதற்கும் தேசியப் பால்வளத் திட்டத்தின் கீழ், குஜராத்தில் ரூ.55613.66 லட்சம் செலவில் (மத்திய பங்கு ரூ.33917.66 லட்சம் உட்பட) 9 திட்டங்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. கால்நடை பராமரிப்பு உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதி திட்டத்தின் கீழ், பால் கூட்டுறவுகள் மற்றும் வேளாண் உற்பத்தியாளர் அமைப்பு ஈடுபட்டுள்ள பால்வள நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. 31.10.2025 நிலவரப்படி, குஜராத் மாநிலத்தின் 12 பால் வழங்கும் சங்கங்களுக்கு ரூ.67233.4 கோடி செயல்பாட்டு மூலதனக் கடனுக்கு ரூ.559.78 கோடி வட்டி மானியம் (வழக்கமான வட்டி மானியமாக ரூ.293.95 கோடி மற்றும் கூடுதல் வட்டி மானியத் தொகையாக ரூ.265.83 கோடி) வழங்கப்பட்டது.
மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் திரு ராஜீவ் ரஞ்சன் சிங் என்கிற லாலன் சிங், மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையில் இத்தகவலைத் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2205033®=3&lang=1
***
SS/SMB/SE
(रिलीज़ आईडी: 2205532)
आगंतुक पटल : 6