மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சகம்
மீன்பிடிப்புக்குப் பிந்தைய உட்கட்டமைப்பு திட்டங்கள்
प्रविष्टि तिथि:
17 DEC 2025 11:59AM by PIB Chennai
மீன்பிடிப்புக்குப் பிந்தைய உட்கட்டமைப்புகளான ஐஸ் தயாரிப்பு தொழிற்சாலைகள், குளிர்பதனக் கிடங்குகள், மீன் கடைகள் ஆகியவை மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுடன் இணைந்து பிரதமரின் மீன் வளத் திட்டத்தின் மத்திய நிதியுதவி மூலம் செயல்படுத்தப்படுகின்றன.
தேசிய உற்பத்தித்திறன் கவுன்சில் மூலம் நடத்தப்பட்ட "உள்நாட்டு மற்றும் கடல் மீன்பிடிப்பில் இழப்புகளின் மதிப்பீடு" என்ற தலைப்பில் நடத்தப்பட்ட ஆய்வில், உள்நாட்டு மீன்வளத்தில், மீன்பிடிப்புக்கு பிந்தைய இழப்புகளின் தேசிய சராசரி 18% (நிதியாண்டு 2019-20) என்பதிலிருந்து 8.84% (நிதியாண்டு 2023-24) ஆகக் குறைக்கப்பட்டுள்ளது என்பதையும், கடல் மீன்பிடிப்பில் இது 21% (நிதியாண்டு 2019-20) என்பதிலிருந்து 9.3% (நிதியாண்டு 2023-24) ஆகக் குறைக்கப்பட்டுள்ளது என்பதையும் வெளிப்படுத்தியது. இந்த மதிப்பானது 2023-24 ஆம் ஆண்டில் தேசிய அளவில் 9.16% ஆக இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
பிரதமரின் மீன் வளத் திட்டத்தின் கீழ், கடந்த ஐந்து ஆண்டுகளில் (நிதியாண்டு 2020-21 முதல் நிதியாண்டு 2024-25 வரை), 734 குளிர்பதன சேமிப்பு கிடங்குகள் மற்றும் ஐஸ் தயாரிப்பு தொழிற்சாலைகள், ஐஸ் பெட்டிகளுடன் கூடிய 10,924 இருசக்கர வாகனங்கள், ஐஸ் பெட்டிகளுடன் கூடிய 9,412 மிதிவண்டிகள், 3915 ஆட்டோ ரிக்ஷாக்கள் உட்பட 27,301 மீன் கொண்டுசெல்லும் வசதிகள், 1265 உயிருள்ள மீன் விற்பனை அலகுகள், 1406 காப்பிடப்பட்ட லாரிகள் மற்றும் 379 குளிர்பதன லாரிகள், 6410 மீன் கடைகள், 202 சில்லறை விற்பனை மீன் சந்தைகள், 21 மொத்த விற்பனை மீன் சந்தைகள் ஆகியவற்றை மேம்படுத்துவதற்கான திட்டங்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.
மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் திரு ராஜீவ் ரஞ்சன் சிங் என்கிற லாலன் சிங், மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையில் இத்தகவலைத் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2205026®=3&lang=1
***
VT/SMB/SE
(रिलीज़ आईडी: 2205468)
आगंतुक पटल : 9