மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம்
ஆதார் எண் வைத்திருப்பவர்களின் தனிப்பட்ட தரவுகளைப் பாதுகாக்க விரிவான நடவடிக்கைகள் – மத்திய இணையமைச்சர் திரு ஜிதின் பிரசாதா
प्रविष्टि तिथि:
17 DEC 2025 12:53PM by PIB Chennai
உலகின் மிகப் பெரிய பயோ மெட்ரிக் அடையாள முறையாக ஆதார் திகழ்கிறது. இது சுமார் 134 கோடி ஆதார் கணக்குகளைக் கொண்டுள்ளது. அத்துடன் 16,000 கோடிக்கும் மேலான அங்கீகாரப் பரிவர்த்தனைகளை நிறைவு செய்துள்ளது. ஆதார் எண்ணை அளிக்கும் இந்திய தனித்துவ அடையாள ஆணையம் ஆதார் எண் வைத்திருப்பவர்களின் தனிப்பட்ட தரவுகளைப் பாதுகாக்க விரிவான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இது தமது தரவை பாதுகாக்க பலஅடுக்கு பாதுகாப்பு கட்டமைப்பை அமல்படுத்தியுள்ளது. அதன் முறைகளைப் பாதுகாக்க தொடர்ந்து மறுஆய்வும், தணிக்கையும் செய்யப்படுகிறது. ஆதார் எண் பரிமாற்றம் மற்றும் சேமிப்பின் போது தரவுகளைப் பாதுகாக்க மேம்பட்ட நவீனத் தொழில்நுட்பங்களை இது பயன்படுத்துகிறது. இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் (யுஐடிஏஐ) தகவல் பாதுகாப்பு மேலாண்மை முறை ISO 27001:2022 சான்றிதழைப் பெற்றதாகும். மேலும் தேசிய முக்கிய தகவல் உள்கட்டமைப்பு பாதுகாப்பு மையம், பாதுகாப்பு அம்சங்களை பராமரிக்க தொடர்ந்து பாதுகாப்பு அறிவுரைகளை அளித்து வருகிறது.
இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் தரவுகளிலிருந்து இதுவரை ஆதார் அட்டை வைத்திருப்பவர்களின் எந்த தனிப்பட்ட தரவும் வெளியாகவில்லை.
இத்தகவலை மக்களவையில் இன்று மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப இணையமைச்சர் திரு ஜிதின் பிரசாதா தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2205048®=3&lang=1
***
SS/IR/KPG/EA
(रिलीज़ आईडी: 2205183)
आगंतुक पटल : 19