மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சகம்
பிரதமரின் மீன்வள மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் மீன் உற்பத்தி மற்றும் உற்பத்தித்திறன் அதிகரிப்பு
प्रविष्टि तिथि:
17 DEC 2025 12:07PM by PIB Chennai
கடந்த 2020 - ம் ஆண்டில், பிரதமரின் மீன்வள மேம்பாட்டுத் திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து, இந்தியாவில் மீன் உற்பத்தி மற்றும் மீன் வளர்ப்பு உற்பத்தித்திறன் இரண்டிலும் கணிசமான உயர்வு ஏற்பட்டுள்ளது. மேலும், நாட்டின் மொத்த மீன் உற்பத்தி 2019-20 - ம் ஆண்டில் 141.60 லட்சம் டன்னிலிருந்து 2024-25 - ம் ஆண்டில்,197.75 லட்சம் டன்னாக (தற்காலிகம்) அதிகரித்து, 38% வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
இந்த வளர்ச்சிக்கு பிரதமரின் மீன்வள மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டுள்ள உள்நாட்டு மீன் வளர்ப்பு விரிவாக்க நடவடிக்கைகள், கடல்சார் மீன்வள மேம்பாடு, மதிப்புச் சங்கிலி உள்கட்டமைப்பு வசதிகளை வலுப்படுத்தும் நடவடிக்கைகள் மற்றும் கொள்கை ரீதியான செயல்பாடுகள் ஆகியவை முக்கியக் காரணிகளாக அமைந்துள்ளன.
2020-21 முதல் 2024-25 வரை இத்திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து நாட்டில், பீகாரின் தர்பங்கா மாவட்டம் உட்பட, மீன் உற்பத்தியில் ஏற்பட்டுள்ள வருடாந்தர வளர்ச்சிக் குறித்த புள்ளி விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்துள்ள மத்திய மீன்வளத்துறை அமைச்சர் திரு ராஜீவ் ரஞ்சன் சிங் இதனைத் தெரிவித்துள்ளார்.
மேலும், இத்திட்டம் தொடங்குவதற்கு முன்பு, ஹெக்டேர் ஒன்றுக்கு 3 டன்னாக இருந்த இந்தியாவின் சராசரி மீன் வளர்ப்பு உற்பத்தித்திறன், 2025-ம் ஆண்டின் தொடக்கத்தில், ஹெக்டேர் ஒன்றிற்கு 4.7 டன்னாக அதிகரித்துள்ளது. உள்நாட்டு மீன் உற்பத்தியில், முதல் 5 இடத்தைப் பிடித்துள்ள மாநிலங்களில் ஆந்திரப் பிரதேசம், மேற்கு வங்கம், உத்தரப் பிரதேசம், பீகார் மற்றும் ஒடிசா ஆகியவை அடங்கும். இதில் பீகார் 4-வது இடத்தில் உள்ளது.
கடந்த 2023-24-ம் ஆண்டில், மீன்வளத் துறையின் தற்போதைய விலை நிலவரப்படி, மொத்த மதிப்புக்கூட்டு 3,68,124 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இது 2018-19-ம் ஆண்டில் 2,12,087 கோடி ரூபாயாக இருந்தது. வேளாண் துறையின் மொத்த மதிப்பில், 2018-19-ம் ஆண்டில் 7 சதவீதமாக இருந்த மீன்வளத் துறையின் பங்களிப்பு, 2023-24-ம் ஆண்டில் 7.55 சதவீதமாக அதிகரித்துள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2205029®=3&lang=1
***
(Release ID:2205029)
SS/SV/KPG/KR
(रिलीज़ आईडी: 2205151)
आगंतुक पटल : 17