குடியரசுத் தலைவர் செயலகம்
ஆதி ஜகத்குரு ஸ்ரீ சிவரத்தரீஸ்வர சிவயோகி மகாசுவாமிகளின் 1066வது ஜெயந்தி விழா குடியரசுத் தலைவர் தொடங்கி வைத்தார்
प्रविष्टि तिथि:
16 DEC 2025 7:04PM by PIB Chennai
குடியரசுத் தலைவர் திருமதி. திரௌபதி முர்மு, இன்று (டிசம்பர் 16) கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தில் உள்ள மாலவள்ளியில், ஆதி ஜகத்குரு ஸ்ரீ சிவரத்தரீஸ்வர சிவயோகி மகாசுவாமிகளின் 1066வது ஜெயந்தி விழாவைத் தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத் தலைவர், அனைத்துக் காலங்களிலும் துறவிகள் தங்களது ஞானத்தாலும் கருணையாலும் மனித குலத்திற்கு ஒளிவிளக்காக வந்துள்ளனர் என்றார்.
உண்மையான பெருமை என்பது அதிகாரம் அல்லது செல்வத்தில் இல்லை; தியாகம், சேவை மற்றும் ஆன்மீக வலிமையில்தான் உள்ளது என்பதை இவர்களின் வாழ்க்கை நினைவூட்டுகிறது. இத்தகைய மகான்களில், ஆதி ஜகத்குரு ஸ்ரீ சிவரத்தரீஸ்வர சிவயோகி மகாசுவாமிகள் ஒளியின் கலங்கரை விளக்கமாகத் திகழ்கிறார்.
சூரத்தூர் மடம் வழிகாட்டுதலின் கீழ் இயங்கும் JSS மகாவித்யாபீடத்தை அவர் பாராட்டினார். இது கல்வி மற்றும் சமூக மேம்பாட்டிற்காக அர்ப்பணிக்கப்பட்ட முன்னணி நிறுவனமாக உருவெடுத்துள்ளது என்றார்.
2047-ம் ஆண்டிற்குள் வளர்ச்சியடைந்த இந்தியா என்ற இலக்கை நோக்கி நாம் முன்னேறும் போது, தொழில்நுட்பத்தின் ஆற்றலும், மதிப்புகளின் வலிமையும் தேவை. நவீனக் கல்வியுடன் தார்மீக ஞானம், பொருளாதார வளர்ச்சியுடன் சமூக உள்ளடக்கம் மற்றும் முன்னேற்றத்துடன் கருணை ஆகியவற்றை இணைப்பதே வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கு அவசியம். இந்தப் பணியில் சூறத்தூர் மடம் போன்ற நிறுவனங்கள் முக்கியப் பங்காற்ற முடியும் என்று குடியரசுத் தலைவர் வலியுறுத்தினார்.
நாட்டின் இளைஞர்களின் ஆற்றல் மற்றும் குறிக்கோளுடன் கூடிய நேர்மை ஆகியவை இந்தியாவின் எதிர்காலத்தை வடிவமைக்கும். எனவே, நாளைய இந்தியாவின் சிற்பிகளை உருவாக்க இளைஞர்களைத் தொடர்ந்து ஊக்குவிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2204813®=3&lang=2
***
(வெளியீட்டு எண்: 2204813)
AD/VK/SE
(रिलीज़ आईडी: 2204937)
आगंतुक पटल : 12