கனரகத் தொழில்கள் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

நாட்டில் 29,151 மின்சார வாகன சார்ஜிங் நிலையங்கள் உள்ளன மத்திய அரசு தகவல்

प्रविष्टि तिथि: 16 DEC 2025 3:53PM by PIB Chennai

கடந்த ஐந்து ஆண்டுகளில் நாடு முழுவதும் மொத்தம் 29,151 மின்சார வாகன சார்ஜிங் நிலையங்கள்  நிறுவப்பட்டுள்ளதாக மத்திய கனரக தொழில்கள் துறை இணையமைச்சர் திரு. பூபதி ராஜு சீனிவாச வர்மா இன்று மக்களவையில் தெரிவித்தார்.

இதில் 8,805 விரைவு சார்ஜிங் நிலையங்களும், 20,346 மெதுவான சார்ஜிங் நிலையங்களும்  அடங்கும். சார்ஜிங் நிலையம் அமைப்பது உரிமம் தேவையில்லாத செயல் என்பதால், தனியார் நிறுவனங்கள் 2024 செப்டம்பர் 17 தேதியிட்ட மத்திய மின்சாரத் துறை வழிகாட்டுதலின்படி இதை நிறுவலாம். ஃபேம்-I திட்டத்தின் கீழ் 479 நிலையங்களும், ஃபேம்-II திட்டத்தின் கீழ் 9,097 நிலையங்களும் நிறுவப்பட்டுள்ளன. மேலும், நாடு முழுவதும் சார்ஜிங் கட்டமைப்பை அமைக்க பிஎம் இ-டிரைவ்  திட்டத்தின் கீழ் ரூ.2,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

அதிகமாக சார்ஜிங் நிலையங்கள்  உள்ள மாநிலங்கள்: கர்நாடகா (6,096), மகாராஷ்டிரா (4,166), உத்தரப் பிரதேசம் (2,316) மற்றும் டெல்லி (1,957).

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2204635&reg=3&lang=1

***

AD/VK/SE


(रिलीज़ आईडी: 2204932) आगंतुक पटल : 20
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी