மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தேசிய கோகுல் இயக்கம் மற்றும் காமதேனு திட்டம்

प्रविष्टि तिथि: 16 DEC 2025 3:00PM by PIB Chennai

கால்நடை உற்பத்தித்திறனை அதிகரிக்க மாநிலங்கள் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு உதவும் வகையில், மத்திய அரசின் கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை  நாடு முழுவதும் பின்வரும் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. வறட்சியால் பாதிக்கப்பட்ட மற்றும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய பகுதிகளான பீதர் மாவட்டம் போன்றவை இதில் அடங்கும். இங்கு கால்நடைகள் கிராமப்புற வருமானத்தின் முக்கிய ஆதாரமாக அமைகின்றன:

1) தேசிய கோகுல் இயக்கம் : உள்நாட்டு இனங்களின் வளர்ச்சி மற்றும் பாதுகாப்பு, பசுக்களின் மரபணு மேம்பாடு, பால் உற்பத்தி மற்றும் பசுக்களின் உற்பத்தித்திறனை மேம்படுத்துவதற்காக தேசிய கோகுல் இயக்கம் செயல்படுத்தப்படுகிறது.

2) தேசிய பால்வள மேம்பாட்டுத் திட்டம் : இது பின்வரும் 2 அம்சங்களுடன் செயல்படுத்தப்படுகிறது:

அம்சம் i:   மாநில கூட்டுறவு பால் பண்ணை கூட்டமைப்புகள்/ மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கம்/ சுய உதவிக்குழுக்கள் / பால் உற்பத்தியாளர் நிறுவனங்கள்/ விவசாய அமைப்புகள் ஆகியவற்றிற்கு  தரமான பால் பரிசோதனை உபகரணங்களுக்கான உள்கட்டமைப்பை உருவாக்குதல்/வலுப்படுத்துதல் மற்றும் முதன்மை குளிர்விக்கும் வசதிகளில் இத்திட்டம் கவனம் செலுத்துகிறது.

அம்சம் ii: விவசாயிகளின் ஒழுங்கமைக்கப்பட்ட சந்தை அணுகலை அதிகரிப்பதன் மூலமும், பால் பதப்படுத்தும் வசதிகள் மற்றும் சந்தைப்படுத்தல் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதன் மூலமும், உற்பத்தியாளருக்குச் சொந்தமான நிறுவனங்களின் திறனை மேம்படுத்துவதன் மூலமும் பால் மற்றும் பால் பொருட்களின் விற்பனையை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2204568&reg=3&lang=1

***

AD/SMB/SE


(रिलीज़ आईडी: 2204923) आगंतुक पटल : 12
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी