ஆயுஷ்
புது தில்லியில் நடைபெறவுள்ள உலக சுகாதார அமைப்பின் இரண்டாவது உச்சிமாநாட்டில் ஆயுஷ் கண்காட்சி
प्रविष्टि तिथि:
16 DEC 2025 2:08PM by PIB Chennai
மத்திய ஆயுஷ் அமைச்சகம், உலக சுகாதார அமைப்புடன் இணைந்து, 2024 டிசம்பர் 17 முதல் 19 வரை புதுதில்லியில் உள்ள பாரத மண்டபத்தில் நடைபெறும் இரண்டாவது உலக சுகாதார நிறுவன உலகளாவிய பாரம்பரிய மருத்துவ உச்சிமாநாட்டின் ஒரு முக்கிய அம்சமாக ஆயுஷ் கண்காட்சியை ஏற்பாடு செய்துள்ளது.
இந்த உச்சி மாநாட்டில் ஒரு முக்கிய தளமாக இந்தக் கண்காட்சி அமைகிறது. இது இந்தியாவின் ஆயுஷ் மருத்துவ முறைகளையும், உலகம் முழுவதிலுமிருந்து வரும் பாரம்பரிய மருத்துவ நடைமுறைகளையும் ஒன்றிணைக்கிறது. உலக சுகாதார அமைப்புகளுக்குள் பாரம்பரிய மருத்துவத்திற்கான சான்றுகளின் அடிப்படையிலான, பாதுகாப்பான மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய அணுகுமுறைகளை மேம்படுத்துவதே இந்த உச்சி மாநாட்டின் பரந்த நோக்கமாகும். அதற்கு இணங்க, அறிவியல் பரிமாற்றம், கொள்கை உரையாடல் மற்றும் புத்தாக்கத்தை ஊக்குவிப்பதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
ஆயுஷ் கண்காட்சி, ஆயுர்வேதம், யோகா, இயற்கை மருத்துவம், யுனானி, சித்தா, சோவா-ரிக், ஹோமியோபதி ஆகியவற்றை முழுமையான மற்றும் சிறப்பாகத் தொகுக்கப்பட்ட முறையில், ஈர்க்கக்கூடிய கண்காட்சிப் பொருட்கள், அறிவியல் விளக்கங்களைக் காட்சிப்படுத்தும். இந்தக் கண்காட்சி, இந்தியாவின் பாரம்பரிய அறிவு, சமகால பொது சுகாதார முன்னுரிமைகளுக்கு ஏற்ப, உலகளவில் பொருத்தமான விவரிப்புகளாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
ஆயுர்வேத கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர் பேராசிரியர் (டாக்டர்) தனுஜா மனோஜ் நெசாரி, “உலக சுகாதார நிறுவனத்தின் இரண்டாவது உலகளாவிய பாரம்பரிய மருத்துவ உச்சி மாநாட்டில் நடைபெறும் ஆயுஷ் கண்காட்சி, இந்தியாவின் பாரம்பரிய மருத்துவ முறைகளை அறிவியல் பூர்வமான மற்றும் உலகளவில் பொருத்தமான முறையில் முன்வைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. பாரம்பரிய அறிவு, சான்றுகள் அடிப்படையிலான நடைமுறைகள் மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களை ஒரே தளத்தில் ஒன்றிணைப்பதன் மூலம், இந்தக் கண்காட்சியானது தகவலறிந்த உரையாடலை வளர்க்கவும், ஆராய்ச்சி ஒத்துழைப்பை வலுப்படுத்தவும், பாரம்பரிய மருத்துவத்தை சமகால சுகாதார அமைப்புகளில் பொறுப்புடன் ஒருங்கிணைப்பதை ஆதரிக்கவும் முயல்கிறது,” என்று கூறினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2204537®=3&lang=1
***
(Release ID: 2204537)
SS/PKV/SE
(रिलीज़ आईडी: 2204887)
आगंतुक पटल : 17