புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம்
பிரதமரின் – விவசாயிகளுக்கான சூரிய சக்தி திட்டத்தின் பயனாளிகளின் எண்ணிக்கை 20 லட்சத்தைக் கடந்தது- மத்திய அமைச்சர் திரு ஸ்ரீபத் யெஸ் ஸோ நாயக்
प्रविष्टि तिथि:
16 DEC 2025 12:11PM by PIB Chennai
பிரதமரின் விவசாயிகளுக்கான சூரிய சக்தி திட்டம் என்பது தேவை அடிப்படையிலான திட்டமாகும். இது விவசாயிகளை எரிசக்தி வழங்குநர்களாக அதிகாரமளிக்கிறது. இதற்கான நிதி மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் அளிக்கும் தகவல்களின்படி ஒதுக்கப்படுகிறது.
இத்திட்டத்திற்காக 2025-26-ம் நிதியாண்டில் 23 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு 2,031.15 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. இதில் தமிழ்நாட்டிற்கு 5.71 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் தமிழ்நாட்டைச் சேர்ந்த 4,950 பேர் பயனடைந்துள்ளனர். நாடு முழுவதும் மொத்தம் 20,42,443 பேர் பயனடைந்துள்ளனர்.
இத்தகவலை மாநிலங்களவையில் இன்று மத்திய புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித்துறை இணையமைச்சர் திரு ஸ்ரீபத் யெஸ்ஸோ நாயக் எழுத்து பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2204463®=3&lang=1
***
AD/IR/KPG/SE
(रिलीज़ आईडी: 2204806)
आगंतुक पटल : 12