ஜவுளித்துறை அமைச்சகம்
சமர்த் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டைச் சேர்ந்த 83,467 பேர் பயனடைந்துள்ளனர்- மத்திய இணையமைச்சர் திரு பபித்ரா மார்கரெட்டா
प्रविष्टि तिथि:
16 DEC 2025 2:29PM by PIB Chennai
மத்திய ஜவுளி அமைச்சகத்தின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் திறன் மேம்பாட்டுத் திட்டமான சமர்த் திட்டம் வேலைவாய்ப்பு சார்ந்த திறன் பயிற்சிகளை அளிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் 2021-22-ம் ஆண்டு முதல் 2025-ம் ஆண்டு டிசம்பர் 11 வரை மொத்தம் 5.26 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர். இவர்களில் 4,67,596 பேர் பெண்கள், 1,44,708 பேர் எஸ்சி வகுப்பைச் சேர்ந்தவர்கள் மற்றும் 68,621 பேர் பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்தவர் ஆவர்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த 83,467 பேர் இத்திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்று பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
இத்தகவலை மக்களவையில் இன்று ஜவுளித்துறை இணை அமைச்சர் திரு பபித்ரா மார்கரெட்டா எழுத்துப் பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2204547®=3&lang=1
***
SS/IR/KPG/KR
(रिलीज़ आईडी: 2204735)
आगंतुक पटल : 55