புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம்
தேசிய பசுமை ஹைட்ரஜன் திட்டத்தின் கீழ் அடைந்த முன்னேற்றங்கள்
प्रविष्टि तिथि:
16 DEC 2025 12:13PM by PIB Chennai
புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம், பசுமை ஹைட்ரஜன் மற்றும் அதன் வழிப்பொருட்களின் உற்பத்தி, பயன்பாடு மற்றும் ஏற்றுமதியில் இந்தியாவை ஒரு உலகளாவிய மையமாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டு தேசிய பசுமை ஹைட்ரஜன் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.
இந்தியாவின் பசுமை ஹைட்ரஜன் உற்பத்தித் திறன் 2030-ம் ஆண்டுக்குள் ஆண்டுக்கு 5 மில்லியன் மெட்ரிக் டன்களாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பசுமை ஹைட்ரஜனின் விலையைக் குறைப்பதற்காக தேசிய பசுமை ஹைட்ரஜன் திட்டத்தின் கீழ் குறிப்பிடத்தக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
சூரிய மின்கலத் தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதற்கும் உள்நாட்டிலேயே தயாரிப்பதற்கும், மொத்த திட்டச் செலவான ரூ 83.19 கோடி மதிப்பிலான ‘பெரோவ்ஸ்கைட் டேன்டெம் சூரிய மின்கலங்களின் மேம்பாடு (கட்டம்-I)’ என்ற ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் திட்டத்திற்கு புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம் ஆதரவளித்து வருகிறது.
இந்தத் தகவலை மத்திய புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறை இணையமைச்சர் திரு. ஸ்ரீபத் யெஸ்ஸோ நாயக் இன்று மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமான பதிலில் தெரிவித்துள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2204464®=3&lang=1
***
AD/PKV /KR
(रिलीज़ आईडी: 2204684)
आगंतुक पटल : 20