ஆயுஷ்
ஆயுஷ் அமைச்சகத்தின் நாடாளுமன்ற ஆலோசனைக் குழுவின் 2-வது கூட்டத்திற்கு மத்திய அமைச்சர் திரு பிரதாப்ராவ் ஜாதவ் தலைமை தாங்கினார்
प्रविष्टि तिथि:
16 DEC 2025 9:35AM by PIB Chennai
ஆயுஷ் அமைச்சகத்தின் நாடாளுமன்ற ஆலோசனைக் குழுவின் 2-வது கூட்டம், மத்திய ஆயுஷ் துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) திரு பிரதாப்ராவ் ஜாதவ் தலைமையில் 15.12.2025 அன்று புதுதில்லியில் நடைபெற்றது. மக்களவை மற்றும் மாநிலங்களவையின் பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
மத்திய இணையமைச்சர் திரு பிரதாப்ராவ் ஜாதவ், விவசாயிகளுக்கு அதிகாரம் அளிப்பதிலும், ஆயுஷ் துறையை வலுப்படுத்துவதிலும், பல்லுயிர் பெருக்கத்தைப் பாதுகாப்பதிலும் மருத்துவத் தாவர சாகுபடியின் முக்கியப் பங்கை வலியுறுத்தினார். ஆரோக்கியமான வாழ்க்கை முறைகளை ஊக்குவிப்பதிலும், ஒரு நிலையான சுகாதார அமைப்பை உருவாக்குவதிலும் கவனம் செலுத்தி, ஆயுஷ் மருத்துவ முறைகளை தேசிய சுகாதாரக் கட்டமைப்புடன் ஒருங்கிணைக்க மத்திய அரசு தொடர்ச்சியான முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக அவர் கூறினார்.
வலுவான பாரம்பரிய மருத்துவ முறைகளின் அடித்தளம் உயர்தர மருந்துகளின் இருப்பில் உள்ளது என்று அமைச்சர் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2204389®=3&lang=1
***
(Release ID 2204389)
SS/PKV /KR
(रिलीज़ आईडी: 2204467)
आगंतुक पटल : 19