பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பாதுகாப்பு நிலங்கள் துறை நூற்றாண்டு விழா: பாதுகாப்புத்துறை அமைச்சர் பங்கேற்பு

प्रविष्टि तिथि: 15 DEC 2025 5:33PM by PIB Chennai

பாதுகாப்பு நிலங்கள் துறை  அதன் 100-வது ஆண்டில் அடியெடுத்து வைப்பதைக் குறிக்கும் வகையில், டிசம்பர் 16 அன்று நடைபெறும் கொண்டாட்டத்தில் பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் தலைமை தாங்குகிறார். ராணுவ நில நிர்வாகம் மற்றும் 61 கண்டோன்மென்ட் வாரியங்களின் நகராட்சி நிர்வாகத்தில் சிறப்பாகச் செயல்பட்டவர்களுக்கு அவர் விருதுகளை வழங்குகிறார்.

1765-ம் ஆண்டில் பேராக்பூரில் முதல் கண்டோன்மென்ட் நிறுவப்பட்ட வரலாற்றைத் தொடர்ந்து, 1926-ம் ஆண்டு இத்துறை முறையாகத் தொடங்கப்பட்டது. தற்போது இந்தியாவிலேயே மத்திய அரசின் மிகப்பெரிய நிலப் பங்களிப்பை இத்துறை நிர்வகிக்கிறது.

'இ-சாவ்னி' திட்டத்தின் கீழ், இத்துறை 20 லட்சம் கண்டோன்மென்ட் குடியிருப்பாளர்களுக்கு 100% நகராட்சி சேவைகளை ஆன்லைனில் வழங்கியுள்ளது. மேலும், நில ஆவணங்கள் அனைத்தும் 'ரக்ஷா பூமி' என்ற மையப்படுத்தப்பட்ட மென்பொருள் தளத்தில் முழுமையாக டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளன. துல்லியமான நில அளவீட்டிற்காக செயற்கை நுண்ணறிவு மற்றும் புவிசார் தகவல் அமைப்பு  போன்ற நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதில் இத்துறை முன்னோடியாக செயல்பட்டு வருகிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2204164&reg=3&lang=1

(வெளியீட்டுஅடையாள எண் : 2204164)

****

SS/VK/SH


(रिलीज़ आईडी: 2204368) आगंतुक पटल : 36
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी