சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்
பனிமூட்டத்தின்போது பாதுகாப்பான பயணம் மேற்கொள்ள தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் நடவடிக்கை
प्रविष्टि तिथि:
15 DEC 2025 5:04PM by PIB Chennai
தேசிய நெடுஞ்சாலைகளில் குளிர்காலப் பனிமூட்டத்தால் ஏற்படும் குறைந்த பார்வைத்திறனைக் கையாள, தேசிய நெடுஞ்சாலை ஆணையம், பொறியியல் மற்றும் பாதுகாப்பு விழிப்புணர்வு நடவடிக்கைகள் மூலம் பாதுகாப்பை மேம்படுத்தியுள்ளது.
பொறியியல் நடவடிக்கைகள் மூலம் சேதமடைந்த சாலை அடையாளங்கள், ஸ்டட்டுகள் மற்றும் பிரதிபலிப்பான்களை மீண்டும் நிறுவுதல், தடுப்புகளில் ஒளிரும் ஸ்டிக்கர்களை ஒட்டுதல், கட்டுமானப் பகுதிகளில் சூரிய ஒளியில் இயங்கும் எச்சரிக்கை விளக்குகள் அமைத்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
பாதுகாப்பு விழிப்புணர்வு நடவடிக்கைகளாக, 'விஎம்எஸ்' பலகைகள் மூலம் பனிமூட்ட எச்சரிக்கைகள் மற்றும் வேக வரம்புகளைக் காட்டுதல், ஒலிபெருக்கி அறிவிப்புகள் மற்றும் சமூக ஊடகங்களில் பொதுச் சேவை அறிவிப்புகளை வெளியிடுதல் ஆகியவை அமல்படுத்தப்படுகின்றன.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2204143®=3&lang=1
(வெளியீட்டுஅடையாள எண்: 2204143)
****
SS/VK/SH
(रिलीज़ आईडी: 2204336)
आगंतुक पटल : 41