பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம்
கேரளாவில் உள்ள கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகள் 15- வது நிதி ஆணைய மானியங்களின் முதல் தவணையாக ரூ 260 கோடிக்கு மேல் பெறுகின்றன
प्रविष्टि तिथि:
15 DEC 2025 1:46PM by PIB Chennai
கேரளாவின் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு மத்திய அரசு 15-வது நிதி ஆணையத்தின் 2025-26-ம் ஆண்டுக்கான மானியங்களுக்கு ரூ 260.20 கோடியை விடுவித்துள்ளது. இந்தத் தொகை, மாநிலத்தின் 14 மாவட்ட பஞ்சாயத்துகள், 152 ஒன்றிய பஞ்சாயத்துகள் மற்றும் 9,414 கிராம பஞ்சாயத்துகளை உள்ளடக்கியது.
பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் மற்றும் ஜல் சக்தி அமைச்சகம் (குடிநீர் மற்றும் சுகாதாரத் துறை) ஊரக உள்ளாட்சி அமைப்புகள் /பஞ்சாயத்து ராஜ் அமைப்புகளுக்கு 15-வது நிதி ஆணைய மானியங்களை விடுவிக்கப் பரிந்துரைக்கின்றன. சம்பளம் மற்றும் பிற நிறுவனச் செலவுகளைத் தவிர, அரசியலமைப்பின் பதினொன்றாவது அட்டவணையில் பட்டியலிடப்பட்டுள்ள 29 தலைப்புகளின் கீழ் இடம் சார்ந்த களத் தேவைகளுக்கு கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகள்/பஞ்சாயத்து ராஜ் அமைப்புகளால் பயன்படுத்தப்பட வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2203998®=3&lang=1
***
SS/PKV/SH
(रिलीज़ आईडी: 2204281)
आगंतुक पटल : 15