சிறுபான்மையினர் நலன் அமைச்சகம்
ஹஜ் யாத்திரைக்கான சுவிதா மொபைல் செயலி மற்றும் முற்றிலும் டிஜிட்டல் மயமாக்கப்பட்ட இணையதளத்தின் வாயிலாக ஆன்லைன் பதிவு
प्रविष्टि तिथि:
15 DEC 2025 1:25PM by PIB Chennai
டிஜிட்டல், மருத்துவம், நேரடி வசதிகளுக்கான உள்கட்டமைப்பு என மூன்று பிரிவுகளில் ஹஜ் யாத்திரை செல்வதற்கான உள்கட்டமைப்பு வசதிகள் விரிவான முறையில் நவீனப்படுத்தும் நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது.
இதன்படி ஹஜ் யாத்திரைக்கான சுவிதா மொபைல் செயலி மற்றும் முற்றிலும் டிஜிட்டல் மயமாக்கப்பட்ட இணையதளத்தின் மூலம் ஆன்லைன் பதிவுகளை மேற்கொள்வது, கட்டணங்களை செலுத்துவது, சுகாதாரம் தொடர்பான தரவுகளை பதிவேற்றம் செய்வது, நிகழ்நேர கண்காணிப்பு மற்றும் கருத்துக்களை பெறுவது உள்ளிட்ட அனைத்து அம்சங்களும் தடையின்றி மேற்கொள்வதன் மூலம், ஹஜ் புனித பயணம் மேற்கொள்ளும் யாத்ரீகர்களுக்கு பயண அனுபவத்தை உறுதி செய்ய வகை செய்கிறது.
யாத்ரீகர்களின் மருத்துவ தேவைகளை கருத்தில் கொண்டு, 24 மணி நேரமும் செயல்படக்கூடிய கிளினிக்குகள், நடமாடும் மருத்துவக் குழுக்கள், பல்மருத்துவ பிரிவுகள் மற்றும் அவசரகால சேவைகள் என சவூதி அரேபியாவில் பல்வேறு வசதிகள் மருத்துவர்களின் உதவியுடன் செயல்பாட்டில் இருக்கும்.
மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்துமூலம் அளித்துள்ள பதிலில் மத்திய சிறுபான்மையின விவகாரங்கள் துறை அமைச்சர் திரு கிரண் ரிஜூஜூ தெரிவித்துள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2203973®=3&lang=1
***
SS/SV/LDN/KR
(रिलीज़ आईडी: 2204094)
आगंतुक पटल : 16