பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
மத்திய அமைச்சகங்கள் / துறைகளின் செயல்பாடுகள் குறித்த மாதாந்திர (நவம்பர் 2025 ) அறிக்கையை நிர்வாக சீர்திருத்தங்கள் மற்றும் பொது குறைதீர்ப்பு துறை வெளியிட்டுள்ளது
प्रविष्टि तिथि:
15 DEC 2025 11:41AM by PIB Chennai
மத்திய அமைச்சகங்கள் / துறைகளின் செயல்பாடுகள் குறித்த நவம்பர் மாதத்திற்கான அறிக்கையை நிர்வாக சீர்திருத்தங்கள் மற்றும் பொது குறைதீர்ப்புத் துறை வெளியிட்டுள்ளது. மையப்படுத்தப்பட்ட பொது குறைதீர்ப்பு மற்றும் கண்காணிப்பு அமைப்பு முறைகள் குறித்து பல்வேறு தன்மைகள் மற்றும் வகைப்படுத்தப்பட்ட பொது குறைகள் குறித்த விரிவான பகுப்பாய்வு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையின்படி, கடந்த மாதத்தில் 1,42,856 குறைகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மத்திய அமைச்சகங்கள் மற்றும் துறைகளுக்கான குறைதீர்ப்பு நடவடிக்கைகளுக்கு எடுத்துக் கொள்ளப்படும் சராசரி கால அளவு 16 நாட்களாகும். 10 படிநிலைகளின் ஒரு பகுதியான சீர்திருத்த நடவடிக்கைகள் குறித்த விரிவான அறிக்கை இது என்பது குறிப்பிடத்தக்கது. குறைதீர்ப்பு நடவடிக்கைகளுக்கான தர நிலைகளை மேம்படுத்துவதுடன் அதற்கான கால அளவை குறைக்கும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
நவம்பர் மாதத்தில் நிர்வாக சீர்திருத்தங்கள் மற்றும் மையப்படுத்தப்பட்ட பொது குறைதீர்ப்பு மற்றும் கண்காணிப்பு முறைகளுக்கான இணையதளத்தின் மூலம், புதிதாக பதிவு செய்துள்ளவர்களின் தரவுகள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. இதன்படி இந்த இணையதளத்தில் மொத்தம் 57,180 புதிய பயனாளர்கள் கடந்த மாதத்தில் மட்டும் பதிவு செய்துள்ளனர்.
அழைப்பு மைங்களின் மூலம் சேகரிக்கப்பட்ட கருத்துக்களின் எண்ணிக்க 70,141 ஆக உள்ளது. அதேசமயம் மத்திய அமைச்சகங்கள் மற்றும் துறைகள் மூலம் சேகரிக்கப்பட்ட விவரங்களின் எண்ணிக்கை 41,472 ஆக உள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2203902®=3&lang=1
***
SS/SV/LDN/KR
(रिलीज़ आईडी: 2204036)
आगंतुक पटल : 47