மனித வள மேம்பாட்டு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

கௌதம புத்த நகரின் பிரதமரின் ஸ்ரீ நவோதயா வித்யாலயாவில் நுண்ணிய காடுகள் திறப்பு

प्रविष्टि तिथि: 14 DEC 2025 6:12PM by PIB Chennai

 

உத்தரப்பிரதேசத்தின் கௌதம புத்த நகரில் உள்ள பிரதமரின் ஸ்ரீ நவோதயா வித்யாலயாவில் சிறப்பு பிரச்சாரம் 5.0-ன் கீழ் உருவாக்கப்பட்ட பழத்தோட்டம் மற்றும் மகரந்தச் சேர்க்கை பூங்காவை உள்ளடக்கிய நுண்ணிய காடுகளை கல்வி அமைச்சகத்தின் பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறைச் செயலாளர் திரு சஞ்சய் குமார் இன்று திறந்து வைத்தார்.

 

இந்த முயற்சி, லைஃப் இயக்கத்திற்கான சுற்றுச்சூழல் குழுக்களின் கீழ், 3,200 சதுர மீட்டருக்கும் அதிகமான தரிசு நிலத்தை துடிப்பான சுற்றுச்சூழல் கற்றல் இடமாக மாற்றியுள்ளது. இந்த நிகழ்வில் நவோதயா வித்யாலயா சமிதி ஆணையர் திரு ராஜேஷ் லக்கானி, பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறையின் இணைச் செயலாளர் டாக்டர் அமர்ப்ரீத் துக்கல் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

 

 

தேசிய கல்விக் கொள்கை 2020-ன் நோக்கத்தின்படி, பாடப்புத்தகங்களுக்கு அப்பால் கற்றலை நிஜ உலக அனுபவங்களுக்கு விரிவுபடுத்துவதன் மூலம் மகிழ்ச்சியான, மன உறுதியுள்ள மற்றும் நன்கு வளர்ந்த நபர்களை வளர்ப்பதில் கல்வியின் உண்மையான மதிப்பு உள்ளது என்று திரு சஞ்சய் குமார் தனது உரையில் வலியுறுத்தினார்.

 

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:

 

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2203738&reg=3&lang=1

***

SS/BR/KR


(रिलीज़ आईडी: 2203943) आगंतुक पटल : 5
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी