பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
உதம்பூரில் நாடாளுமன்றத் தொகுதி விளையாட்டு போட்டி நிறைவு விழா ஏற்பாடுகளை ஆய்வு செய்தார் மத்திய இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் : டிசம்பர் 25-ல் காணொலி மூலம் பிரதமர் உரையாற்றுகிறார்
प्रविष्टि तिथि:
14 DEC 2025 4:43PM by PIB Chennai
ஜம்மு காஷ்மீரின் உதம்பூரில் 2025 டிசம்பர் 25 அன்று சன்சத் கேல் மஹோத்சவம் எனப்படும் நாடாளுமன்றத் தொகுதி அளவிலான விளையாட்டு போட்டி நிறைவு விழா ஏற்பாடுகளை அந்த மக்களவைத் தொகுதியின் உறுப்பினரும் மத்திய இணையமைச்சருமான டாக்டர் ஜிதேந்திர சிங் இன்று காணொலி மூலம் ஆய்வு செய்தார்.
நிறைவு நிகழ்வை வெற்றிகரமாக நடத்துவது குறித்து அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை நடத்தினார்.
2025 டிசம்பர் 25-ம் தேதி நடைபெறும் இந்த நிறைவு நிகழ்வில் பிரதமர் திரு நரேந்திர மோடி காணொலி மூலம் உரையாற்றுகிறார். நாடாளுமன்ற உறுப்பினர்களின் தீவிர ஈடுபாட்டுடன் ஆகஸ்ட் 25, 2025 அன்று தொடங்கிய சன்சத் கேல் மஹோத்சவ் டிசம்பர் 25, 2025 அன்று நிறைவடைவதாக டாக்டர் ஜிதேந்திர சிங் கூறினார். நாடு முழுவதும் சிறந்த விளையாட்டு சூழல் அமைப்பை உருவாக்க இந்த போட்டி நடத்தப்படுவதாக தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2203721®=3&lang=1
***
SS/PLM/RJ
(रिलीज़ आईडी: 2203778)
आगंतुक पटल : 14