குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு தளர்வுகள், சலுகைகளுடன் கூடிய நடைமுறைகளை அரசு செயல்படுத்துகிறது - மத்திய இணையமைச்சர் செல்வி ஷோபா கரந்த்லாஜே

प्रविष्टि तिथि: 14 DEC 2025 12:20PM by PIB Chennai

தரக் கட்டுப்பாட்டு உத்தரவுகள், உள்நாட்டு உற்பத்தியைப் பாதிக்காமல் இருப்பதை உறுதி செய்வதற்காக, குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு விலக்குகள்/தளர்வுகள் வழங்கப்படுகின்றன.

சில முக்கிய தளர்வுகளும் விலக்குகளும் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

சான்றிதழ் செயல்முறைகள் குறித்த கருத்துகளின் அடிப்படையில், குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் துறைக்கு பிஐஎஸ், நிதித் தளர்வுகளையும் தொழில்நுட்ப தளர்வுகளையும் வழங்குகிறது.

* குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள், உள்ளக ஆய்வகத்தை பராமரிப்பது விருப்பத்தேர்வாக மாற்றப்பட்டுள்ளது.

* பணவியல் கொள்கை பரிமாற்றத்தை மேம்படுத்தும் நோக்கில், குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கான கடன்களை வெளிப்புற அளவுகோலுடன் இணைக்குமாறு வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது.

* அரசு குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கான பரஸ்பர கடன் உத்தரவாதத் திட்டத்தை அறிவித்துள்ளது. இது குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் தங்கள் வணிகங்களை வளர்ப்பதற்கு கடன்களைப் பெற உதவும் வகையில் வடிவமைக்கப்பட்ட அரசு ஆதரவுடன் கூடிய முயற்சியாகும். இது கடன்களைப் பெறுவதை எளிதாக்குகிறது.

முன்னுரிமைத் துறை வழிகாட்டுதல்களில் குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் துறைக்கு கடன் வழங்குவதற்கான குறிப்பிட்ட இலக்குகள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

இந்தத் தகவலை மக்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் மத்திய குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் துறை இணையமைச்சர் செல்வி ஷோபா கரந்த்லாஜே தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2203666&reg=3&lang=1

***

SS/PLM/RJ


(रिलीज़ आईडी: 2203694) आगंतुक पटल : 20
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी