கப்பல் போக்குவரத்து அமைச்சகம்
தேசிய நீர்வழிகளில் பயணிகள் போக்குவரத்து குறித்த தகவல்
प्रविष्टि तिथि:
13 DEC 2025 5:44PM by PIB Chennai
இந்தியாவில் தேசிய நீர்வழிகளில் பதிவு செய்யப்பட்ட மொத்த பயணிகள் போக்குவரத்து, 2023-24-ல் 1.61 கோடியாகவும், 2024-25-ல் 7.64 கோடியாகவும் இருந்தது.
தேசிய நீர்வழிகள் (படகுகள்/முனையங்கள் கட்டுமானம்) விதிமுறைகள், 2025, வடமேற்குப் பகுதிகளில் உள்ள படகுகள்/முனையங்களை மேம்படுத்துவதிலும், அரசு சாரா முதலீடுகள் மூலம் உள்கட்டமைப்பு வளர்ச்சியை ஊக்குவிப்பதிலும் தனியார் துறையின் பங்களிப்பை அனுமதிக்கிறது. இதற்காக "ஜல்சம்ரிதி" என்ற பிரத்யேக ஆன்லைன் போர்டல் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் தனியார் நிறுவனங்கள் நீர்வழிப் பாதைகளில் முனையங்களை நிர்மாணிப்பதற்கான "ஆட்சேபனையின்மை சான்றிதழ்" பெற பங்குதாரர்கள் விண்ணப்பிக்கலாம், உள்நாட்டு நீர் போக்குவரத்துத் துறையை ஊக்குவிக்க, ஜல்வாகக் திட்டம் அரசால் தொடங்கப்பட்டுள்ளது. இதில், 2024-25 நிதியாண்டு முதல் 2026-27 நிதியாண்டு வரை 3 ஆண்டுகளுக்கு ரூ. 95.42 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மக்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் துறை அமைச்சர் திரு சர்பானந்த சோனோவால் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2203526®=3&lang=1
***
SS/PKV/RJ
(रिलीज़ आईडी: 2203614)
आगंतुक पटल : 6