கப்பல் போக்குவரத்து அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தமிழ்நாட்டில் உள்ள துறைமுகங்களை மேம்படுத்த எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் - மத்திய அமைச்சர் திரு சர்பானந்த சோனோவால் தகவல்

प्रविष्टि तिथि: 13 DEC 2025 5:43PM by PIB Chennai

கடல்சார் இந்தியா தொலைநோக்குப் பார்வை 2030-ன் அடிப்படையில் சென்னை-காமராஜர்-கடலூர் துறைமுக தொகுப்பு 2047-ம் ஆண்டுக்குள் கிழக்கு கடற்கரையில் ஒரு மிகப் பெரிய துறைமுக வழித்தட தொகுப்பாக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த துறைமுக வழித்தட தொகுப்பு, 2047-ம் ஆண்டுக்குள் ஆண்டுக்கு 300 மில்லியன் டன்களுக்கு மேல் சரக்குகளை கையாளும் திறனை அடைய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சாகர்மாலா திட்டத்தில், துறைமுக நவீனமயமாக்கல் பணிகளின் கீழ், 2,89,427 கோடி ரூபாய் செலவில் மொத்தம் 234 திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. மேலும், 234 திட்டங்களில், 32,675 கோடி ரூபாய் மதிப்புள்ள 106 திட்டங்கள் முடிக்கப்பட்டுள்ளன. 74,743 கோடி ரூபாய் மதிப்புள்ள 56 திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

சென்னை, எண்ணூர் (காமராஜர்), தூத்துக்குடி ( சிதம்பரனார்) துறைமுகங்களின் நவீனமயமாக்கல் பணிகளும் இதில் அடங்கும். இவற்றில் ரயில், சாலை இணைப்புகள் போன்ற உள்கட்டமைப்பு மேம்பாட்டில் கவனம் செலுத்தப்படுகிறது. தமிழ்நாட்டின் கடல்சார் அமைவிடம், ஆழமான துறைமுகங்கள் ஆகியவற்றுடன் அரசின் ஆதரவு, தமிழ்நாட்டை ஆசியாவின் முக்கிய கடல்சார் மையமாக நிலைநிறுத்தும்.

இந்தத் தகவலை மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து, நீர்வழிகள் துறை அமைச்சர் திரு சர்பானந்த சோனோவால் மக்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்தார்.

***

(Release ID: 2203525)

SS/PLM/RJ


(रिलीज़ आईडी: 2203607) आगंतुक पटल : 67
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी