PIB Headquarters
azadi ka amrit mahotsav

மக்கள் நீதிமன்றங்கள் மூலம் மக்களுக்கான நீதி - ஒவ்வொருவரும் விரைவான தீர்வைப் பெறுவதற்கான நடைமுறை

प्रविष्टि तिथि: 13 DEC 2025 1:51PM by PIB Chennai

லோக் அதாலத் எனப்படும் மக்கள் நீதிமன்றங்கள் ஒரு முறைசாரா மன்றமாகும். இதில் சச்சரவுகள் ஒருமித்த கருத்தின் மூலம் தீர்க்கப்படுகின்றன. இதில் தேசிய அளவில் இருந்து வட்டார அளவிலான அதிகாரிகள் வரை, நாடு முழுவதும் சரியான தகராறு தீர்வை உறுதி செய்கிறார்கள். மின்னணு மக்கள் நீதிமன்றங்கள் ஆண்டுதோறும் பல லட்சக் கணக்கான வழக்குகளைத் தீர்த்து , விரைவான, செலவு குறைந்த தீர்வுகளை வழங்கி, நீதிமன்ற நிலுவைகளைக் குறைக்கின்றன.

லோக் அதாலத் எனப்படும் இந்த மக்கள் நீதிமன்றங்கள் மாவட்ட அளவில் சிறிய நகரங்களில் வழக்கமாக குறிப்பிட்ட சனிக்கிழமை நடைபெறுகிறது. நிலப்பிரச்சனைகள், கடன் பிரச்சினைகள் போன்றவற்றுக்கு இங்கு தீர்வு காணப்படுகிறது. பதற்றமான நீதிமன்ற அறைகளோ, அச்சுறுத்தும் சட்ட நடைமுறைகளோ இல்லாமல் இருதரப்பு கலந்துரையாடல், பேச்சுவார்த்தை மூலம் எளிமையான முறையில் தீர்வு காணப்படுகிறது.

இதுவே லோக் அதாலத்தின் முக்கிய நோக்கம். மக்களை மையமாகக் கொண்ட மன்றம் இதுவாகும். இங்கு சர்ச்சைகள் ஒருமித்த கருத்தின் மூலம் தீர்க்கப்படுகின்றன. லோக் அதாலத்கள் இந்தியாவின் மிகவும் நம்பகமான மாற்று தகராறு தீர்வு வழிமுறைகளில் ஒன்றாக மாறியுள்ளனமுறையான நீதிமன்றங்களைப் போலல்லாமல், லோக் அதாலத்துகள் முறைசாரா தளங்களாகும். இதில் நீதிமன்றக் கட்டணங்கள் இல்லை. சிக்கலான நடைமுறைகள் இல்லை , வெற்றியாளர்களோ தோல்வியுற்றவர்களோ இல்லை. நியாயமான, விரைவான தீர்வைக் கண்டறிய உதவுவதே இந்த முயற்சி. லோக் அதாலத்தில் ஒரு வழக்கு தாக்கல் செய்யப்படும்போது நீதிமன்ற கட்டணம் எதுவும் செலுத்த வேண்டியதில்லை.

மாநிலம், மாவட்டம், தாலுகா, உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் என பல்வேறு நிலைகளில் லோக் அதாலத் எனப்படும் மக்கள் நீதிமன்றங்களை நிறுவுவது தகராறு தீர்வுக்கான நாடு தழுவிய, நிறுவன கட்டமைப்பை உறுதி செய்கிறது.

தேசிய அளவில் இருந்து வட்டார (தாலுகா) அளவிலான அமைப்பு வரை நான்கு அடுக்கு கட்டமைப்பாக இது செயல்படுகிறது.

  • உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியின் கீழ் தேசிய சட்ட சேவைகள் ஆணையம்
  • உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியின் கீழ் மாநில சட்ட சேவைகள் ஆணையம்
  • மாவட்ட, அமர்வு நீதிபதியின் கீழ் மாவட்ட சட்ட சேவைகள் ஆணையம்
  • வட்டார (தாலுகா) சட்ட சேவைகள் குழுவுடன் ஒருங்கிணைத்து, மாவட்ட அளவிலான லோக் அதாலத்களை ஏற்பாடு செய்து, சட்ட உதவியையும் உள்ளூர் செயல்பாடுகளையும் நிர்வகித்தல்

இந்த நான்கு அடுக்கு கட்டமைப்பு மூலம், எளிதாக, சரியான நேரத்தில், மக்களை மையமாகக் கொண்ட நீதி என்ற நடைமுறை யதார்த்தமாகிறது.

லோக் அதாலத்துகள் ஆண்டு முழுவதும் வெவ்வேறு அதிகார வரம்புகளில் செயல்படும் அதே வேளையில் , தேசிய லோக் அதாலத்துகள் நீதித்துறையின் அனைத்து மட்டங்களிலும் ஒரே நாளில் நாடு தழுவிய அமர்வுகளை நடத்துவதன் மூலம் இந்த கட்டமைப்பை விரிவுபடுத்துகின்றன. மேலும் அதிக அளவிலான வழக்குகளை குறித்த காலக்கெடுவிற்குள் தீர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளன.

லோக் அதாலத் எனப்படும் மக்கள் நீதிமன்றம், சட்டங்களையும் நீதிமன்றங்களையும் பற்றியது மட்டுமல்ல. அது கண்ணியம், நியாயம், நம்பிக்கை ஆகியவற்றுடன் மக்கள் வாழ்க்கையில் முன்னேறுவதற்கான எளிய, ஆழமான வழியாகும்.

மேலும் விவரங்களுக்கு கீழ்க்கண்ட ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்:https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2203446&reg=3&lang=1

***

(Release ID: 2203446)

SS/PLM/RJ


(रिलीज़ आईडी: 2203510) आगंतुक पटल : 18
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Bengali , Bengali-TR , Gujarati