மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம்
azadi ka amrit mahotsav

இணையதள பாதுகாப்பு கட்டமைப்பு குறித்து வெளிநாட்டுப் பத்திரிகையாளர்களுடன் கலந்துரையாடல்

प्रविष्टि तिथि: 13 DEC 2025 9:34AM by PIB Chennai

மின்னணு, தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் இந்திய கணினி அவசரகால பதிலளிப்பு குழுவான சிஇஆர்டி-ஐஎன், வெளியுறவு அமைச்சகத்துடன் இணைந்து, ஐரோப்பா, அமெரிக்கா, மத்திய ஆசிய நாடுகளைச் சேர்ந்த பத்திரிகையாளர்களுக்காக இணைய பாதுகாப்பு தொடர்பான கலந்துரையாடல் அமர்வை புதுதில்லியில் நேற்று (டிசம்பர் 12, 2025) நடத்தியது.

இந்த அமர்விற்கு புதுதில்லியில் உள்ள சிஇஆர்டி-ஐஎன்-னின் தலைமை இயக்குநர் டாக்டர் சஞ்சய் பாஹ்ல் தலைமை வகித்தார். தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் இணைச் செயலாளர் திரு கிருஷ்ணன் குமார் சிங் வரவேற்புரை நிகழ்த்தினார். அவர் செயற்கை நுண்ணறிவு உச்சி மாநாடு உட்பட அமைச்சகத்தின் பல்வேறு முன்முயற்சிகளை எடுத்துரைத்தார்.

இணையதள பாதுகாப்பு, பேரிடர் மேலாண்மை, பாதிப்பு மதிப்பீடு, தகவல் பகிர்வு இணையதள குற்றச் சம்பவங்களுக்கு ஒருங்கிணைந்த நடவடிக்கைகள், இந்தியாவில் உள்ள சிறப்பு பயிற்சி திட்டங்கள் ஆகியவற்றில் சிஇஆர்டி-ஐஎன்-னின் பங்கு குறித்து டாக்டர் பாஹ்ல் எடுத்துரைத்தார்.

தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்தாமல் முன்கூட்டியே பாதுகாப்பை உறுதிசெய்து, அச்சுறுத்தல்களுக்கு எதிராக உரிய நேரத்தில் எச்சரிக்கைகளையும் ஆலோசனைகளையும் சிஇஆர்டி-ஐஎன் வழங்குகிறது என்று டாக்டர் பாஹ்ல் கூறினார். உலகளாவிய இணைய பாதுகாப்பு மையமாக இந்தியா விரைவாக மாறி வருவதாக டாக்டர் பாஹ்ல் கூறினார்.

தகவல் தொழில் நுட்ப அமைச்சகத்தின் இணைச் செயலாளர் திரு கிருஷ்ணன் குமார் சிங் பேசுகையில், செயற்கை நுண்ணறிவு தொடர்பான உச்சிமாநாடு பிப்ரவரி 2026-ல் இந்தியாவில் நடைபெற உள்ளதாக கூறினார். இணையதள பாதுகாப்பு தீர்வுகளை உருவாக்கும் புத்தொழில் நிறுவனங்களுக்கு வழங்கப்படும் ஆதரவு குறித்து அவர் விரிவாக விளக்கினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்தி குறிப்பை காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2203387&reg=3&lang=1

***

(Release ID: 2203387)

SS/PLM/RJ


(रिलीज़ आईडी: 2203437) आगंतुक पटल : 25
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi