சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

சுகாதார சேவைகளில் செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான நோய் கண்டறிதல் தீர்வுகளைப் பயன்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்

இடுகை இடப்பட்ட நாள்: 05 DEC 2025 4:18PM by PIB Chennai

நாடு முழுவதும் பொது சுகாதார சேவைகளில் மாற்றத்தை ஏற்படுத்த சுகாதாரம் அமைச்சகம் செயற்கை நுண்ணறிவை பயன்படுத்துகிறது. சுகாதாரத்தில் செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான தீர்வுகளின் பயன்பாட்டை ஊக்குவிக்கும் நோக்கில், சுகாதார அமைச்சகம் தில்லி எய்ம்ஸ்சண்டிகர் பிஜிஐஎம்இஆர், ரிஷிகேஷ் எய்ம்ஸ் ஆகிய மருத்துவமனைகளை 'செயற்கை நுண்ணறிவுக்கான சிறப்பு மையங்களாக அறிவித்துள்ளது.

 

மத்திய காசநோய் பிரிவு, தேசிய நோய் கட்டுப்பாட்டு மையம், ஐசிஎம்ஆர், உயர்கல்வி அமைச்சகம், தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய அறிவியல் நிறுவனம் போன்ற முக்கிய அமைப்புகளுடன் பல்வேறு செயற்கை நுண்ணறிவுத் திட்டங்களுக்காக சுகாதார அமைச்சகம் ஒத்துழைத்து செயல்படுகிறது.

 

காசநோய் ஒழிப்புத் திட்டத்தின் கீழ் செயற்கை நுண்ணறிவுத் தீர்வு பயன்படுத்தப்படுகிறது. வழக்கமான முறைகளைப் பயன்படுத்தி பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதை விட, இதில் 12 முதல் 16% கூடுதல் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

 

மத்திய சுகாதாரத்துறை இணையமைச்சர் திரு பிரதாப்ராவ் ஜாதவ் இன்று மக்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் இதனைத் தெரிவித்தார்.

 

(Release ID: 2199422)

SS/PLM/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2203327) வருகையாளர் எண்ணிக்கை : 30
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Punjabi