ஜவுளித்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பாரம்பரிய ஜவுளிகளுக்கான, உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத் தொகைத் திட்டத்தில் குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களின் பங்கேற்பு

இடுகை இடப்பட்ட நாள்: 05 DEC 2025 5:55PM by PIB Chennai

நாட்டில் மனிதர்களால் உருவாக்கப்படும்  நெசவு ஆடைகள், துணிகள், தொழில்நுட்ப ஜவுளி ஆகியவற்றின் உற்பத்தியை அதிகரிப்பதற்காக ஜவுளிகளுக்கான உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத்தொகை திட்டம் செப்டம்பர் 2021-ல் தொடங்கப்பட்டது.

தற்போதைய நிலவரப்படி, இத்திட்டத்தின் கீழ் மொத்தம் 91 நிறுவனங்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. இதில் 36 குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களும் அடங்கும். 30.09.2025 நிலவரப்படி, உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத் தொகைத் திட்டத்தின் கீழ் உள்ள குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் 733 கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்களை ஏற்றுமதி செய்துள்ளதுடன் 7,290 கோடி ரூபாய் மொத்த வருவாயை எட்டியுள்ளன

இந்தத் தகவலை , இன்று மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், ஜவுளித்துறை இணையமைச்சர் திரு பபித்ரா மார்கெரிட்டா தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2199515&reg=3&lang=1

(Release ID: 2199515)

SS/PLM/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2203325) வருகையாளர் எண்ணிக்கை : 35
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी